பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிஞ்சய சோழன் 71 படவில்லை. இத்தகைய ஐயப்பாடுகள் எல்லாம் எதிர் காலத்தில் கிடைக்கும் ஆதாரங்களால் நீங்கும் என்பது ஒருதலை. இனி, அரிஞ்சயனது கல்வெட்டுக்கள் சோழநாட்டில் யாண்டும் காணப்படாமையால் இவன் முடிசூடிய சில திங்கள்களில் இறந்திருத்தல் வேண்டும் என்பது திண் ணம். ஆராய்ச்சியாளருள் சிலர் இவன் மூன்று ஆண்டுகள் ஆட்சி புரிந்திருத்தல் கூடும் என்று கருதுகின்றனர். 1 இளவரசுப் பட்டம் பெற்ற நாள் முதல் ஆட்சியாண்டு கணக் கிடப்படுவது அக்காலத்து வழக்கமாதலின் அங்ஙனம் கருது வதற்கு இடமில்லை என்க. இவனுக்கு வீமன் குந்தவை, ஆதித்தன் கோதைப் பிராட்டி, கல்யாணி, பூதி ஆதித்தப் பிடாரி என்ற நான்கு மனைவியர் இருந்தனர் 2 . அவர்களுள், வீமன் குந்தவை என்பவள் கீழைச் சளுக்கிய மன்னனாகிய இரண்டாம் வீமன் புதல்வியாவாள். இவள் திருப்பழனப் பக்கத்தி லிருந்த அரையன் ஆதித்த வீமன் மகளாயும் இருத்தல் கூடும் என்று கருதப்படுகிறது 3. குந்தவை என்ற பெய ருடன் சோழநாட்டில் முதலில் காணப்படும் அரசி இவ் வம்மையாகவே இருத்தலாலும், இப்பெயர் ஆந்திர நாட் டில் வழங்கும் பெயராயிருத்தலாலும், சோழர்கள் தம் பகைவர்களைப் புறங்காண வேண்டிப் புறநாட்டு வேந் தருள் சிலரை அந்நாட்களில் தமக்கு உறவினராக்கிக் கொண்டு நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டிருத்த லாலும் அரிஞ்சயன் மனைவியாகிய இம்மாதேவி கீழைச் சளுக்கிய மன்னன் மகளாகவே இருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும். மற்றொரு மனைவியாகிய ஆதித்தன் கோதைப்பிராட்டி என்பவள் ஒரு சேரமன்னன் 1. Historical Sketches of Ancient Dekhan, p. 242. 2. S. I. I., Vol. XIII, No. 225. 3. The Colas, இரண்டாம் பதிப்பு, பக்கம் 152