பக்கம்:பிள்ளைக்கலி.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II 2 செய்தது. அந்தக் குரலில், 'மருதப்யா, காளீசுவரா' என்ற புகழ்ச் சொற்கள் மிதந்தன. பலம் கொண்ட மட்டும் ரதத்தை இழுத்துப்பார்த்த மக்க ளுக்கு வியப்போ பெரிதும் மேலிட்டது. எவ்வளவு பலம்கொண்டு இழுத்தாலும் ரதம் ஓர் அங்குலம்கூட அசைந்தபாடில்லை. அதன் காரணம் ? ரதம் இப்படி நகராமல் அடம் செய்வதைக் கண்ட பெரிய மருது, ஆசாரியை வியந்த கண்களுடன் நோக்கிக் காரணம் கேட்டார். ஆசாரியும் அந்தச் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியவர் போல் கூறினர்: அரசே! சிற்பிக்குச் செலுத்த வேண்டிய காணிக்கையை முதலில் கேட்கிறது, ரதம்' மருது பாண்டியர்கள் தம்மை மறந்து கம்பமாயினர். பெரிய மருது சற்றுத் திடம் கொண்டு, மலர்ந்த முகத்துடன் கேளும் சிற்பியாரே, கேளும்! எதைக் கேட்டாலும் உம்முடைய கலைத் திறனுக்காக இக்கணமே தருவதற்குச் சித்தமா யிருக்கிறேன், நான் ஏற்கெனவே வாக்களித்தபடி இது காளையார் அறிய நான் தரும் வாக்கு' என்று கூறி முடித்தார். கூட்டமெங்கும் ஒரே அமைதி. ‘அரசே! என்னுடைய வேண்டுதலை மன்னித்து, பிறகே கேட்பதை அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ரதம் பவனி வந்து கோயிலே அடையும்வரை, நான் இந்நாட்டு அரசனுக வேண்டும். இதுவே என் ஆசை. தங்களிடம் கோரும் காணிக்கை!” மக்கள் ஆசாரியின் பேராசையைக் கண்டு ஆகாகாரமிட்டனர். ஆல்ை, அரசர் மட்டும் அமைதியாகவே கையமர்த்தி, ரதத்தை விட்டிறங்கினர். தொடர்ந்து சின்ன மருது இறங்கினர். 'கலையரசன் நீர்! எனவே, ரதப்பவனிவரை, நீரே அரசனுக இருக்கலாம் ஆசாரியாரே! இதோ மணிமுடி, மோதிரம், செங்கோல்' என்று மனநிறைவோடு குப்பமுத்தாசாரிக்கு மகுடம் சூட்டிஞர் பெரிய மருது. குப்பமுத்தாசாரி-அல்ல, அல்ல-குப்பமுத்துப் பாண்டி டியர் வீறுகொண்ட தோரணையில் ரதத்தை நாடிச் சென்ருங்