பக்கம்:பிள்ளைக்கலி.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏器剑 காட்சி தெரிந்தது. அவள் அந்தக் காட்சியைக் கண் கொட்டாமல் பார்த்திருந்தாள். எனக்கே இந்தச் சூழ்நிலை வேடிக்கையாகப் பட்டது. ஆறு மாதத்திற்குமுன் நடக்கவிருந்த திருமணத்தின் போது விஜயா மட்டும் காணுமற் போகாமலிருந்தால், இப்போ திருக்கும் நிலை வேறுதானே ?... இந்த மலைமகளின் மடியில் அவள் வீற்றிருக்க, அவள் மடியில் நான் சாய்ந்து படுத்திருப்பேன்! அவள் என் கேசங்களை வருடி இன்பச் சிலிர்ப்பு மூட்டுவாள். யாருமற்ற இந்தப் பிராந்தியத்தில், எங்களின் இணைந்த சிரிப் பொலி எதிரொவித்துக் கிடக்கும். ஒருவருக்காக ஒருவர் படைக்கப்பட்ட ஒருமை உணர்வில் கண்மூடி லயித்துக் காலத்தை மறந்திருப்போம். அப்படியானல் நாங்கள் பிரிந்தது. ஏன் ? விதி என்கிருளே விஜயா! ஆளுல் நாங்கள் ஒருவருக்காக ஒருவர் படைக்கப்படவில்லையா ? 'உங்களுக்கு என்மீது மிகுந்த கோபம். இல்லையா ?” விஞ வந்தது. அந்த வின, விடையை எதிர்பார்ப்பதுதான் விந்தையாகப்பட்டது. நான் அவளை நோக்கினேன். மண்டியிட்டவாறே ஒரு கையைத் தரையில் ஊன்றிக் கொண்டு, மற்ருெரு கையால் மார்பில் விழுந்திருந்த பின்னலை வருடிக் கொண்டிருந்தாள். மலைகளின் பசுமைச் சூழ்நிலையில், மறைந்து விட்ட ஒளியற்ற பகலின் மெல்லிய இருளில், மங்கிய ஒவியம்போல் தூரத்தேபார்வையைநிலைக்கவிட்டு, என் பதிலுக்குக் காத்திருந்தாள் அவள். எவ்விதப் பதிலும் இல்லாமல் போகவே என்னைத் திரும்பிப் பார்த்தாள். என் முகத்தை நோக்குந் தோறும், கண்கள் இடப்பக்க நெற்றிப் பொட்டருகே நிலைத்து மீள்வது நன்முகப் புலப்பட்டது. நான் சிறிது நகர்ந்து வலது புறமாக அவளே நோக்கி உட்கார்ந்தேன். - - "உங்களுக்குக் கோபம் இருக்கும்தான். ஆனல் அவமதித்து விட்டேன் என்று மாத்திரம் நினைக்க வேண்டாம்...' நான் இதற்குப் பதில் பேசவில்லை. பேச ஆரம்பித்ததி. லிருந்து, அவளும் அதையேதான் திருப்பித் திருப்பி வெவ்வேறு விதமாகச் சொல்லுகிருள். ஞாயிறு பணியை முடித்ததும், இருள் கரகரவென்று உலகத்தை முடிவிட்டது. அந்த இருளில், அவ ளோடு உட்கார்ந்து, மேலும் மேலும் இதே போன்ற வார்த் தைகளைக் கேட்பதைப் போன்ற கசப்பு வேறு எதுவுமில்லை. 9.