பக்கம்:பிள்ளைக்கலி.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. பொங்கல் வாழ்த்து பொன். செனரிராசன் 'பொங்கலோ பொங்கல்," 'பொங்கலோ பொங்கல்’ என்று குழந்தைகள் எழுப்பிய கூட்டொலி, வீடெல்லாம் நிறைந்து வீதியையும் எட்டி, தெருவில் உருமிக் கொண்டும், ஊளையிட்டுக் கொண்டும் சென்ற ஊர்திகளின் ஒசைகளிடையே மூழ்கி, இன்பத்திலும் துன்பத்திலும் ஊரெல்லாம் கலந்து கொள்ளும் பண்டைய வாழ்க்கை முறையின் கடைசி மூச்சுப்போல மறைந்து கொண்டிருந்தது. என் பெரிய பெண் செம்மலர், அடுக்களையில் அம்மாவுக்கு உதவிக் கொண்டிருந்தாள். சிறிய பையன் கண்ணப்பன், பசி பசி என்று வெல்லம், வாழைப்பழம், கரும்பு முதலியன இருந்த சாமி அறைப்பக்கம் கண் வைத்தபடியே சிணுங்கிக் கொண்டிருந் தான். நடுப்பையன் நல்லேயன், நண்பர்களோடு காலேக் காட்சிக்குப் போய்விட்டதாக மனைவி கூறியது நினைவுக்கு வந்தது. வானெலியில் தமிழர் திருநாள் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந் தன. நான் 'பொங்கல் மலர்' ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந் தேன். சார் தபால்' என்ற ஒசை கேட்டு எழுந்து தெருப்பக்கம் போனேன். அங்கே தபால்காரர் ஒரு கட்டுத் தபால்களை வைத்துக் கொண்டு காத்துக் கொண்டிருந்தார். எனக்குமுன் ஒடிய சின்னப் பையன் அவற்றை வாங்கிக் கொண்டான். தபாலைக் கொடுத்து விட்டுப் போகாமல் நின்ற தபால்காரருக்கு, பொங்கல் மாமூலான இரண்டு ரூபாயைக் கொடுத்தேன். 'ஹி'ஹி' என்ற பெரிய சிரிப்போடு வாங்கிக் கொண்டு தெருவில் இருந்த இரும்புக் கேட்டையும் சார்த்திவிட்டுப் போனர். சின்னப் பையன் சுமந்து கொண்டிருந்த தபால் கட்டை வாங்கிக் கொண்டு கட்டில் அறைக்குப் போய்ப் படுத்தேன். கடிதங்களை மேம்போக்காகப் பார்த்துவிட்டு வாழ்த்துகளை ஒவ்வொன்ருகப் படித்தேன். முதலில் இருந்த வாழ்த்து மிகச் சிறியதாக, ஆனல் விலை உயர்ந்ததாகக் காணப்பட்டது. பளபளத்த வண்ண அட்டையில் அருவி விழும் குன்றிற்குப் பின் கதிரவன் எழுந்து வானமெல்லாம் செம்மையாக்கும் காட்சி அதில் தீட்டப் பெற்றிருந்தது. அது வில்சனிடமிருந்து வந்திருந்தது. வில்சன், ஐந்தாறு ஆண்டு களுக்குமுன் என்னிடம் படித்தவன். சொல்பேச்சு கேளாதவன்,