பக்கம்:பிள்ளைக்கலி.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. I இரைந்து சொல்லிவிட்டுக் கலகலவென்று சிரிப்டான். 'எனக்கு மட்டும் துரோகம் செய்தாயோ?” என்று கூறிப் பல்லே நறநற வென்று கடிப்பான். அன்று இராஜன் வாய்க்கால் கரையில் பூங்கொடியைப் பிரிந்த சமயத்தில், ஒரு கையில்ை அவளுடைய மோவாய்க் கட்டையை நிமிர்த்திப் பிடித்துக் க்ொண்டு தன்னு டைய முகத்தை அருகில் கொண்டுபோனதும், அவள் சிச்சி! நாம் இன்னம் சின்னப் பிள்ளைகளா?' என்று சொல்லி உதறிக் கொண்டு ஓடிப்போனதும் எப்போதும் அவன் மனக்கண்முன் நின்றது. சில சில சமயம் அவளுடைய உருவம் அதே நிலையில் எதிரில் நிற்பதுபோல் தோன்றும். அப்போது அவனுடைய கைகளும் முகமும் கோரணிகள் செய்யும். தெரியுமா ? என்ன மறக்கக்கூடாது ?' என்பான். இவைகளையெல்லாம் கவனித்த அவனுடைய தாயார், 'ஐயோ! என் மகனுக்கு மோகினி பிடித்துவிட்டதே!' என்று தவித்தாள். அவளுடைய உறவு முறையாருக்குள் கலியானத் துக்குத் தகுதியாயிருந்த பெண்களைப் பற்றியெல்லாம் விசாரிக்கத் தொடங்கிளுள். இலையிலே சோற்றை வைத்துக்கொண்டு சாப்பிடாமல் மகன் என்னவோ யோசனை செய்து கொண்டிருப்பதைக் காணும் போது, அடே அப்பா! உனக்கென்னடா இப்படி வந்தது ?" என்பாள். கிருஷ்ணன், 'சீ' போ! உன்னே யார் கேட்டது : என்று வள்ளென்று விழுவான். 'ஐயோ! என் மகன் இப்படி ஒருநாளும் இருந்ததில்லையே, மாரியாத்தா என் மகனைக் காப் பாற்றடி உனக்குப் படையல் வைக்கிறேன்' என்று வேண்டிக் கொள்வாள். பெருமாள் கோளுர் செத்துப் போனதிலிருந்து கிருஷ்ண னுடைய மனக் குழப்பம் இன்னும் அதிகமாயிற்று. பூங்கொடி தாய் தந்தையற்ற அநாதையென்பதும், அவளுக்கு மாமன் வீட்டைத் தவிர வேறு போக்கிடம் கிடையாதென்பதும் ஊரில் எல்லோருக்கும் தெரியும். பெருமாள் கோளுர் உயிரோடிருக்கும் வரை அபிமானமாய் வைத்துக்கொண்டிருந்தார். இனிமேல் அவளை யார் கவனிப்பார்கள் ? பிடாரி அவளை வதைத்து விடு வாளே ? ஒருநாள் கிருஷ்ணன் தாயாரிடம், 'ஏன், ஆயா பெருமாள் கோளுர் செத்துப் போளுரே ? இனிமேல், அந்தப் பெண் என்ன செய்யும் ?' என்று கேட்டான். 'எந்தப் பெண்ணடா ?”