உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளைக்கலி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32


அதுதானம்மா, பூங்கொடி!” 'அவளை அந்தப் பிடாரி துரத்திவிடுவாள், சீக்கிரம். இப் போதே திருட்டுப்பட்டம் கட்டிவிட்டாளே, தெரியாதோ உனக்கு ?’’ 'அது என்ன, அம்மா?' என்று கிருஷ்ணன் பரபரப்புடன் கேட்டான். 'கோனர் ரொக்கப் பணம் வைத்திருந்தாராம். அதைத் காணுேமாம். பிடாரி அந்த அநாதைப் பெண்மேலே பழியைப் போடுகிருள். அவள்தான் எடுத்துவிட்டாள் என்கிருள். அந்தப் பெண் அப்படிச் செய்திருக்கவே செய்திருக்காது. ஏதாவது பழி வைத்துத்தானே வீட்டை விட்டுத் துரத்த வேண்டும் ?” கிருஷ்ணனுடைய நெஞ்சில் முள் வைத்தது போல் சுருக் கென்றது. அன்றைய தினம் காட்டிற்கு அவள் தனியாக வந் திருந்ததும், தன்னக் கண்டு திகைத்து நின்றதும், எதற்காக வந்தாய் என்று கேட்டதற்குப் பதில் சொல்லாமல் மூடுமந்திரம் செய்ததும் ஞாபகத்திற்கு வந்தன. உண்மையில் அந்தப் பெண் திருடிதானே ? இந்த எண்ணம் அவனுடைய நெஞ்சில் அளவிலாத வேதனையை உண்டாக்கிற்று. எவ்வளவுதான் யோசித்தாலும் அவன் ஒரு முடிவுக்கே வரவேண்டியிருந்தது. பிடாரி சொல்வது நிஜந்தான். பூங்கொடி தான் பணத்தை எடுத்திருக்கவேண்டும்! அதை எங்கேயோ ஒளிப்பதற்குத்தான் அன்று காட்டிற்கு வந்திருக்கிருள். இந்தச் சந்தேகம் தோன்றவே, அன்றைய தினத்திலிருந்து கிருஷ்ணன் மாடுகளை ஒட்டிக் கொண்டு காட்டிற்குப் போன போதெல்லாம் சுற்றுமுற்றும் பார்த்த வண்ணம் இருந்தான். பூங்கொடி பணம் ஒளித்து வைத்திருக்குமிடம் தன் கண்ணில் ஒரு வேளை பட்டு விடுமோ என்று அவனுடைய நெஞ்சில் திக்குத் திக்கென்று அடித்துக்கொண்டே இருந்தது. பெருமாள் கோனரின் கருமாதிக்கு மறுநாள் காலை கிருஷ்ணன் பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது அடுத்த வீட்டுக்காரி, 'அமிர்தம்! சங்கதி கேட் டாயா ?' என்று சொல்லிக்கொண்டு வந்தாள். "என்ன சமாசாரம் ?' என்று அமிர்தம் கேட்டாள். 'பிடாரி, பூங்கொடியை வீட்டை விட்டுப் போகச் சொல்லி விட்டாள். அந் த ப் பெண் அழுதுகொண்டே கிளம்பிப் போகிறது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/30&oldid=1395646" இலிருந்து மீள்விக்கப்பட்டது