பக்கம்:பிள்ளைக்கலி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36


'இதை எதற்காக என்னிடம் கொடுத்தாய் ?” என்று கிருஷ்ணன் கோபமாய்க் கேட்டான். சொத்ைதச் சொத்துக்குரியவரிடம் கொடுத்து விடவேண்டுமென்று நீ அப்போதே சொல்லவில்லையா?* "ஆமாம்; என்னேக் கொண்டு போய்ப் பிடாரியிடம் கொடுக்கச் சொல்கிருயா ?” 'நீ என்ன வேண்டுமானலும் செய், யாரிடம் வேண்டுமா குலும் கொடு. உன்னுடைய சொத்தை உன்னிடம் நான் சேர்ப் பித்து விட்டேன்' என்ருள். கிருஷ்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. என்னவோ புதிர் போடுவது போலிருந்தது. 'என்ன உளறுகிருப் ? என்று கேட் டான். - "நான் ஒன்றும் உளறவில்லை. அதற்குள் ஒரு கடுதாசி இருக்கிறது; எடுத்து வாசித்துப் பார்!’ என்ருள் பூங்கொடி. கிருஷ்ணன் ஆவலோடு கடுதாசை எடுத்து வாசித்தான். அதில் பின்வருமாறு எழுதியிருந்தது : முத்துக்கோனுன் மகன் பெருமாள் கோனன் சுயப் பிரக்ஞையுடன் மனப்பூர்வமாய் எழுதிவைப்பது என்ன வென்ருல், இந்தப் பெட்டியில் நானுாற்றிருபது ரூபாய்ப் பணமும், பன்னிரண்டு முழுப்பவுனும் இருக்கின்றன. இந்தப் பணம், பவுன் எல்லாம் என்னுடைய சுயார்ஜிதம். இந்தத் தொகை முழுவதையும் என்னுடைய கண்ணன. மருமகள் பூங்கொடிக்குக் கலியாணப் பரிசத்துக்காக" எழுதி வைக்கிறேன். அவளைக் கலியாணம் பண்ணிக் கொள்கிறவன் இது எல்லாவற்றையும் அடைய வேண்டியது. பணத்த்ை வீண் செலவு செய்யாமல் நிலம் வாங்குவதற்காவது, வீடு கட்டிக்கொள்ளவாவது உப யோகிக்க வேண்டியது. .

இந்த விஷயம் வெளியில் தெரிந்தால், பூங் கொடியை என்னுடைய பெண்சாதி கஷ்டப்படுத்தி ஒரு வேளை உயிருக்கே அபாயம் செய்வாளென்று பயந்தும், இன்னும் பணத்துக்கு ஆசைப்பட்டு யாராவது உபயோக மற்றவன் அவளைக் கலியாணம் செய்துகொள்ள முயற்சிக் கலாமென்று நினைத்தும் பூங்.ெ . . . ஆவதற்குள் இந்த விஷ்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/34&oldid=1395650" இலிருந்து மீள்விக்கப்பட்டது