பக்கம்:பிள்ளைக்கலி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. திரிவேணி கு. அழகிரிசாமி அயோத்தி நகரம். இந்த அயோத்தி கோசல நாட்டின் தலை நகரும் அல்ல; சரயுநதி தீரத்தை மாடகூடங்களுடன் அலங் கரிக்கும் ராஜதானிப் பட்டணமும் அல்ல. இங்கே ராமன் இருக்கிருன் இந்த இடம் அயோத்தியாக இருக்கிறது. ராவண வதம் முடிந்து எத்தனையோ நூற்ருண்டுகள் கழிந்து விட்டன. ஆனல், இன்றும் ராமன் கட்டுறுதி கொண்ட வாலிபனுக இங்கே வாழ்கிருன். அவன் புஜங்களில் கைகளைக் கோத்து, பிரிய வசனங்கள் பேசி விளையாடும் ஜானகி, யெளவனம் துளும்பும் இளவயது மங்கையாக இலங்குகிருள். அன்னத்தின் நடையோடு அவளுடைய நடையை ஒப்பிட்டும், மதயானையின் கம்பீர நடை யோடு ராமனுடைய நடையை ஒப்பிட்டும் இருவரும் தத்தமக்குள் புன்னகை செய்து கொள்ளும் வாலிபம் இன்றும் சிம்மாசனத்தில் அமர்ந்து அரசு செலுத்துகிறது. பழைய நிகழ்ச்சிகள், யுகக் கணக்கில் கடந்துபோன காலத்துக்கு முன்னே என்றென்ருே நடந்த நிகழ்ச்சிகள், தம்முள் வேற்றுமை தெரியாமல் ஒரு நிகழ்ச்சியாக, ஒரு பிண்டமாகத் திரண்டுவிட்டன போலத் தோன்றுகின்றன. - ... " காலம் என்ற பனிமூட்டம் நடுவே கவிந்திருக்கிறது. இதை இருவருடைய கண்களும் ஊடுருவிப் பார்க்கின்றன. மட்டத்திற்கு அப்பால் தென்படும் அகலிகையின் விமோசனமும், வில்லிறுத்த பேராண்மையும், தாதை சொல்கொண்டு கானக வாழ்க்கையை மேற்கொண்டதும், குகனுடைய வரவேற்பும், பரதன் பாதுகை சுமந்து சென்ற கோலமும், அப்புறம் மரவுரி தரித்து பர்ணசாலை முற்றத்தில் ஆடிய விளையாட்டுகளும், இருவரும் பிரிந்து தனி வாழ்வு வாழ்ந்ததும், ஜடாயுவின் தெய்வ மரணமும், சபரியின் தனிவிருந்து, இலங்கை யுத்தம், கும்பகர்ணனின் மறக்க முடியாத அத்திம காலம், ராவணனின் வெற்பெடுத்த திருமேனி மண்ணில் சாய்ந்ததைப் பார்த்து நின்றது. சிறை மீட்சி முதலியவையும் ஒன்ருகி ஒரு நிகழ்ச்சியாகி விட்டன. இந்த நிகழ்ச்சியால் மோதுண்ட இருவரின் உள்ளமும் புகவளர்ச்சி பெற்றுக் கணித் திருக்கிறது. இந்த உள்ளத்தில், இந்த உள்ளப் பரப்பில், இன்று வர்ண ஜாலங்கள் இல்லை. ஸ்வர பேதங்கள் இல்லை. பழைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/36&oldid=1395652" இலிருந்து மீள்விக்கப்பட்டது