50
இக்கேள்வி கந்தசாமி உடையாரை ஒருகணம் திகைத்த வைத்தது. பின் தன்னைச் சமாளித்துக்கொண்டு கண்ை லேயே இருந்தது; பார்க்கலாமென்று வந்தேன்' என்று தயக்கத் துடன் சொன்னர்.
'இப்போது பார்த்தாயிற்ருே, இல்லையோ ?”
'ஏனப்பா, இப்படிப் பேசுகிருய் ?’’
பின்னே என்ன? இப்போது என்ன குடி முழுகிப் போயிற்று என்று எண்ணி ஊரிலிருந்து ஓடி வந்தாய் ?”
'உன்னைப் பார்க்க வரக்கூடாதா?’’
என்ன என்ன பார்க்கிறது என்கிறேன்? நான் கரைந்து போய் விட்டேன, அப்படியே இருக்கிறேன என்ரு பார்க்க வந்தாய் ?”
"என்ன சிதம்பரம், என்னென்னவோ பேசுகிருயே ?”
"நான் எத்தனைதரம் உனக்குச் சொல்லியிருக்கிறேன், என்னைப் பார்க்க இங்கே வராதே என்று. அதைக் கேட்காமல் வந்து என் மானத்தை வாங்குகிருயே!....'
"நான் உன்னைப் பார்க்க வருவது உனக்கு அவமானமாகவா இருக்கிறது ? அப்படியானுல் இனிமேல் நான் வரவில்லை. அப்பா!'
'நீ அடிக்கடி வந்து பார்த்தால்தான், பிள்ளைமேலே உருகிப் போகிருய் என்று மற்றவர்களுக்குத் தெரியும் போலே இருக்கு....'
"மனசு கேட்காமல் பிள்ளையைப் பார்க்கிறது கூடவா குற்றம்: அட கடவுளே!' என்று கிழவர் தலையில் அடித்துக் கொண்டார். கைத்தடி நழுவி விழுந்தது. அவர் சிரமத்துடன் அதைக் குனித்து எடுக்கலாஞர். இந்நிலை சிதம்பரத்தின் கோபத்தை ஒரளவு தணிக்கத்தான் செய்தது. நான்தான் அடிக்கடி கடிதமெழுதுகிறேனே! விவு விடுகிற போதெல்லாம்
ஊருக்கு வருகிறேன். அப்படியிருக்க........' என்று மேலே பேச முடியாமல் நிறுத்தினன்.
"எல்லா லீவுக்கும் எங்கே அப்பா வந்தாய்?..... ஊம்....
அதெல்லாம் சொன்னல்கூட உனக்குக் கோபம் வரும். தசரா பொங்கல் ஆண்டிகைக்குக்கூட நீ ஊருக்கு வராமற் போகவேதான். என்னமோ ஏதோ என்று எங்கள் மனது அடித்துக் கொண்டது.... அவள் வேறே நச்சரித்துக் கொண்டிருந்தாள், போய்ப் பார்த்து விட்டுவா போய்ப் பார்த்து விட்டுவா”என்று. அத்துடன் உனக்குப் பெண் கொடுக்க நம் உறவின் முறையார் தூது விட்டுக் கொண்