பக்கம்:பிள்ளைக்கலி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7


'அங்கே, எங்கே போயிட்டிஹ, ஒங்களைத்தானே! கொஞ்சம் நல்லெண்ணெய் வாங்கிகிட்டு வாருங்களேன்!’ "எங்கிட்ட இப்பொ துட்டுமில்லெ, காசுமில்ல' என்று திரும்பி நின்று பதிலளித்தார் முருகதாசர். 'அதுவும் அப்படியா! இன்ன இந்த மிளாவாட்டியிலே மூணு துட்டு இருக்கு; அதை எடுத்துகிட்டுப் போங்க!' “வந்ததுக்கு ஒரு வேலையா? அங்கே ஒருபாடு எழுதித் தொலைக்கணும்; இங்கே உனக்கு இப்பதான் எண்ணெ புண் ளுக்கு-பகலெல்லாம் என்ன செய்துக்கிட்டு இருந்தே? இருட்னம் பொறவா எண்ணெய் வாங்றது! எல்லாம் நாளைக்குப் பார்த்துக் கலாம்! " 'சோம்பல் வந்தா சாத்திரமும் வரும், எல்லாம் வரும். ஏன், அண்னேக்குப் போய் வாங்கிட்டு வரலியா - எல்லாம் ஒங்களுக்குத்தான். இப்பத்தான் அப்பளக்காரன் வந்து கொடுத்து விட்டுப் போனன்; பிரியமா சாப்பிடுவேளென்று சொன்னேன். பின்னே அந்தச் சின்னக் கொரங்கே என்ன இன்னும் காணலே! போனப் போனதுதான்; நீங்கதான் சித்தப் பாருங்களேன்! இவ்வளவிற்கும் அவர் இருந்தால்தானே! விறகுப் பிரதே சத்தைத் தாண்டி வழுக்குப் பிரதேசத்தை எட்டிவிட்டார். புகை யையும் பேச்சையும் தப்பி வந்தால் போதும் என்ருகி விட்டது. முருகதாசரின் ஆஸ்தான அறையில் ஒரு விசித்திரம் என்ன வென்ருல், சென்னையில் லேட்டிங் டைம் அட்டவணையைக் கூட மதிக்காமல், அது இருண்டுவிடும். இம்மாதிரி மண்ணெண்ணெய் நெருக்கடி ஏற்படாத காலங் களில், அந்த அறைக்குத்தான் முதலில் இராத்திரி ஆல்ை, எண்ணெய் நெருக்கடிக் காலங்களில் சிவபிரானின் ஒற்றைக்கண் போன்ற அந்த அறையின் சன்னல் எதிர்ப்பக்கம் நிற்கும் மின்சார விளக்குக் கம்பத்திவிருந்து கொஞ்சம் வெளிச்சத்தைப் பிச்சை வாங்கும். கார்ப்போரேஷன் தயவு வரும் வரை, பூர் முருகதாசர், வேறு வழியில்லாமல், தெருநடையில் நின்று அலமுவின் வரு கையை எதிர்நோக்கியிருக்க வேண்டியதாயிற்று. முருகதாசர் வானத்தை அளக்கும் கதைகளைக் கட்டுவதில் மிகவும் சமர்த்தர்: 'சாகா வரம் பெற்ற கதைகளும் எழுதுவார். அந்தத் திறமையை உத்தேசித்து, ஒரு விளம்பரக் கம்பெனி மாதம் முப்பது ரூபாய்க்கு வானத்தை யளக்கும் அவரது கற்பனைத் திறமையைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டது. அதனல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/5&oldid=1395621" இலிருந்து மீள்விக்கப்பட்டது