பக்கம்:பிள்ளைக்கலி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. நந்தவனத்தில் ஒர் ஆண்டி ஜெயகாந்தன் தூரத்துப் பார்வைக்கு அது ஒரு நந்தவனம்போல் தோற்ற மளிக்கும். உண்மையில் அது ஒரு நந்தவனம் அல்ல; இடுகாடு. பச்சைக் கொடிகள் பற்றிப் படர்ந்த காம்பவுண்ட் சுவரால் நாற்புறமும் சுற்றி வளைக்கப்பட்ட அந்த இடுகாட்டின் மேற்கு மூலையில், பனை ஒலைகளால் வேயப்பட்ட சின்னஞ்சிறு குடிசை ஒன்று இருக்கிறது. அதில்தான் ஆண்டி வசிக்கிருன். குடிசைக்கு முன்னே வேப்பமரக் கிளையில் கட்டித் தொங்கும் துளியில் அவன் செல்வ மகன் இருளன் சுகநித்திரை புரிகிருன். அதோ அவன் மனைவி முருகாயி வேலியோரத்தில் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருக்கிருள். ஆம் ஆண்டிக்கு மனைவியும் மகனும் உண்டு. அவன் பெயர் மட்டும்தான் ஆண்டி. அவன் இருக்கும் அந்த இடம் தூரத்துப் பார்வைக்குத்தான் நந்தவனம். ஆண்டி ஒரு வெட்டியான். அவன் வாழும் இடம் இடுகாடு. அந்த மயான பூமிக்குவரும் பிணங்களுக்குக் குழி வெட்டுவது அவன் தொழில். அதற்காக முனிசிபாலிடியில் மாதம் ஏழு ரூபாய் சம்பளமும், அந்த இடுகாட்டிலேயே வசிக்க ஒரு விடும் தந்திருக்கிரு.ர்கள். ஆண்டி ஒருமாதிரியான ஆள்: பைத்தியம் அல்ல. மகிழ்ச்சி என்பது என்னவென்றே தெரியாத மனிதர்கள், எப்பொழுதும் குஷியாகப் பாடிக்கொண்டே இருக்கும் அவனை ஒருமாதிரி' என்று நினைத்தார்கள். அவன் உடம்பில் எப்பொழுதும் அலுப்போ, சோர்வோ ஏற்படுவதே இல்லை. வயது நாற்பது ஆகிறது இருபது வயது இளைஞனைப்போல் துறுதுறுவென்றிருப் 莒FG碎。 அர்த்தம் புரிந்தோ புரியாமலோ அவன் வாய், உரத்த குரலில் சதா ஒரு பாட்டை அலுப்பிக் கொண்டே இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/56&oldid=1395672" இலிருந்து மீள்விக்கப்பட்டது