莎盘 'நந்தவனத்தில் ஒர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக் கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி...' குழிவெட்டும் வேலே இல்லாத சமயத்தில் அவன் நந்தவன வேலையில் ஈடுபடுவான். அவன் உழைப்பால்தான் அந்த இடுகாடு கூட ‘நந்தவன மாகி இருக்கிறது. அவனுக்குச் சோகம் என்பது என்னவென்றே தெரியாது. செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சும்போதும் சரி, பிணங் களுக்குக் குழி பறிக்கும்போதும் சரி-சலனமோ, சங்கடமோ ஏதுமின்றி, உரத்த குரலில் கழுத்து நரம்புகள் புடைக்க அந்தப் பாட்டைத் தனது கரகரத்த குரலில் பாடுவான். அவனைப் பொறுத்தவரை அந்தப் பாட்டிற்கு, அர்த்தம் கிடையாது: வெறும் பழக்கம், என். அது புதைக்கும் இடமாதலால் பெரும்பாலும் குழந்தை களின் பிரேதம்தான் அங்கு வரும். 'மூன்றடி நீளம் மூன்றடி ஆழக் குழிகள் வெட்டுவது ஆண்டிக்கு ஒரு வேலையே அல்ல. தலையில் இறுகக் கட்டிய முண்டாசுடன், வரிந்து கட்டிய வேட்டியுடன், கால்களை அகற்றி வைத்துக்கொண்டு நிற்பான். அவன் கையிலுள்ள மண்வெட்டி அஞயாசமாகப் பூமியில் விழுந்து மேற்கிளம்பும், ஒவ்வொரு வெட்டுக்கும் ஈரமண் மடித்து கொடுக்கும். பூமியே புரண்டு கொடுக்கும். "...கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக் கூத்தாடிக்... கூத்தாடிப்... போட்டுடைத் தாண்டி’ அத்தக் கூத்தாடி' என்ற வார்த்தையை அழுத்தி அழுத்தி உச்சரித்தவாறு பூமியின் மார்பை அவன் பிளக்கும்போது அவனே யாராவது கண்டால் அந்தப் பாட்டின் பொருள் தெரிந்துதான் அவன் பாடுகிருன் என்றே எண்ணத் தோன்றும். உண்மையில் அந்தப்பாட்டுக்கு உரிய பொருள் அவனுக்குத் தெரியவே தெரியாது. - அவன் அந்தப்பாட்டை, எங்கு, எப்பொழுது உான் ?
பக்கம்:பிள்ளைக்கலி.pdf/57
Appearance