பக்கம்:பிள்ளைக்கலி.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73


லயிக்கவிட்டுக் கொண்டிருந்தான். ஆளுல், அவனுடைய தலையை உறுத்திக் கொண்டிருந்த அந்தப் பழைய செங்கற்கள் அந்தப் பழைய சம்பவங்களை யெல்லாம் அவ்வப்போது நெருடிவிட்டு, நினைப்பூட்டிக்கொண்டே இருந்தன. மூன்றுண்டுகளுக்குமுன் ஒரு நாள் - இன்றுபோல் அன்றும் இப்படித்தான் இந்த அரச மரத்தடியில் படுத்துக் கிடந்தான் ஆண்டியப்பன். ஆனல் இன்றுள்ள உற்சாகமோ, மகிழ்ச்சியோ, பெருமிதமே அன்று அவனிடம் கடுகளவும் இல்லை. சோர்வு, களைப்பு, பசி, பயம், நம்பிக்கையின்மை முதலானவற்ருல் மெலிந்து குலைந்து கிழித்தெறியப்பட்ட கந்தல் துணிபோல் கருட்டிக் கொண்டு படுத்துக் கிடத்தான். அவனுக்கு இந்த ஊர் புதிது. எங்கோ ஒரு பட்டிக்காட்டி லிருந்து பிழைப்புத் தேடி இங்கு வந்து சேர்ந்தவன்; வந்த பிறகு தான் அவனுக்கு ஒரு பெரிய விஷயம் விளங்கியது: இந்தப் பட் டணத்திலே அவனைப்போன்ற பாமரர் வாழவும் முடியாது, சாகவும் முடியாது என்று. எந்த வேல்யும் செய்யத் திண்மை பெற்றவர்களுக்கே இங்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பு. ஆண்டியப்பனே பிறவிக் கூனன் முதுகில் ஒரு மூட்டையை வைத்துக் கட்டிகுற்போல் தலே உயரத்துக்கு முதுகெலும்பு முட்டிக் குவிந்திருக்கும். இடது கால் கொஞ்சம் ஊனம். வலப்பக்க மாகச் சாய்ந்து உந்தி உந்தி நடப்பான். வயது முப்பத்தைந்துக்கு மேல் ஆகிவிட்டது. நல்ல கறுத்த மேனி, நோஞ்சலான உடல், இப்பேர்ப்பட்டவனுக்கு இந்தப் பட்டணத்தில் என்ன வேலை கிடைக்கும் ? அப்படியும் அவன் மனம் சோராமல் ஐந்தாது தாள்களாக வேலை தேடிச் சுற்றியலைந்தான். எங்கும் எந்த வேலையும் கிடைக்கவில்லை. மூன்று நாள்களாகப் பச்சைப் பட்டினி. குழாய்த் தண்ணீர் குடித்துக் குடித்து அவன் வாய் கசத்து விட்டது. சில சமயம் அந்தத் தெருக் குழாய்கள் கூட அவன் மீது இரக்கம் காட்ட மறுத்து வெறும் காற்றுச் சிறலிட்டன. இரவு நேரம் வந்தால் அவன் படுப்பதற்கு இடமின்றி மிகவும் திண்டாடிப் போவான். பட்டணத்து வீடுகளில் திண்ணைகள் வைத்துக் கட்டும் பழக்கம் கிடையாது: அ! : , ; அவை நாய்களுக்காகவே விடப்படும்:னி