77
பொம்மைகளை அடுக்கிக்கொண்டிருந்த கிழவன் திடீரென உதட்டைக் கடித்து முகத்தைச் சுளித்துக்கொண்டு, 'அடடா, இது உடைஞ்சு போயிருக்கே இண்ணேக்கு நாலணு நஷ்டக் கணக்கா ?' என்று அலுத்தபடி தன் கையிலிருந்த ஒரு பொம் மையைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். அது ஒரு பிள்ளை யார் பொம்மை. அழகான வர்ணப் பூச்சுடன் அற்புதமாக அமைந்திருந்தது. ஆனல் அதன் வலது கை உடைந்து மூவி யாகிவிட்டிருந்தது.
கவலையுடன் அந்தப் 1 ?3äärru arrr! பொம்மையைப் பார்த்துக் கொண்டிருந்த கிழவன் பெருமூச்சு விட்டு, ம்......
நல்ல பொம்மை; இனிமே இதை யார் வாங்குவா ? . என்று முணுமுணுத்துக்கொண்டே அதைக் கீழே எறிந்துவிட்டுக் கூடையைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.
இ.தொன்றையுமே கவனியாமல் ஒருக்களித்துப் படுத்துக் கிடந்த ஆண்டியப்பன் வெகு நேரம் கழித்து மெள்ள எழுந்து உட்கார்ந்தான். பசியால் அவன் கண்கள் மங்கி இருண்டன. எதிரிலிருந்த தெருக்குழாய்க்குப் போய் வயிறு நிறையத் தண்ணீர் பருகிவிட்டுத் திரும்பி வந்தான். சிறிதே தென்பு பெற்றிருந்த அவன் பார்வையில் கீழே கிடந்த விநாயகர் பொம்மை பட்டது. அதை ஆவலுடன் எடுத்துத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். அதன் அழகிய தோற்றம் அவன் மனத்தைக் கொள்ளை கொண்டது. பிள்ளையாரின் வலக்கை உடைந்திருப்பது அவனுக்கு ஒரு பெரிய குறையாகத் தோன்றவில்லை. ஒரு வகையில் அது அவனுக்குத் திருப்தியாகவும் இருந்தது. பிள்ளையாரின் உடைந்த வலக் கையையும், தனது ஊனமான இடக் காலையும் மாறி மாறிப் பார்த்துத் தனக்குள் புன்னகை புரிந்துகொண்டான்.
நீண்ட நேரமாக அந்தக் கணபதிப் பொம்மையையே பார்த்துக் கொண்டிருந்த ஆண்டியப்பனின் மனத்தில் என்ன தோன்றிற்ருே. தெரியவில்லை. பொம்மையைக் கீழே வைத்து விட்டுச் சட்டென்று எழுந்தான். தெருக் குழாய்க்குப்போய் நன்ருகக் குளித்துவிட்டுத் திரும்பி வந்தான். அங்குக் கிடந்த அந்த மூன்று செங்கற்களையும் அரச மரத்தடிக்குக் கொண்டு போய், மரத்தின் வேர் இடுக்கில் அவற்றை முக்கோண வடிவில் ஒரு மாடம்போல் சாத்தி வைத்தான். பிறகு, அந்தப் பிள்ளை யார்ப்பொம்மையைக் கொண்டு வந்து பயபக்தியுடன் அம் மாடத்தினுள் உட்கார வைத்தான் தெருக் குழாய்க்குப் பின்னல் ஒரு மஞ்சள் குவளைப் பூச்செடி இருந்தது. அதிலிருந்து