பக்கம்:பிள்ளைக்கலி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88


பாலம் இவ்வளவு பெரிதாக இல்லை. தேர்தலேயொட்டி அவசரம் அவசரமாக இப்போதிருந்தவர்கள் பாலத்தைப் பெரிதாக்கி ஞர்கள். என்ன அவசரமோ, பாலம் கட்டி முடிவதற்குள்ளேயே மந்திரியைக் கூப்பிட்டுப் பாலத்தைத் திறந்து விட்டார்கள். பாலத்தைக் காட்டி ஒட்டு வாங்கிவிடலாம் என்ற ஆசைதான். பாலத்தின் ஒரு முனையில் நின்றவாறு சுற்றும்முற்றும் பார்த்தார் சிவராம பிள்ளை. பிறகு மெதுவாகப் பாலத்தின் மீது நடக்கத் தொடங்கிஞர். நடையில் தளர்ச்சி எப்படித் தோன்றியது ? நேற்றுவரை இல்லாத ஆயாசம் இன்று எப்படி வந்தது : பாலத்தின் கைப் பிடிச்சுவரை ஒட்டியே நடந்தார். நாலு முழ வேட்டி பட படத்தது. மேலே போட்டிருந்த கோட்டு தோள்பட்டைப் பக்கத்தில் தையலில் கிழிந்து சிரித்தது. கோட்டு நிறம் மாறி, வெளிறி, சாம்பல் நிறத்திலிருந்தது. சில இடங்களில் அது ஒர் உயர்ந்த துணி என்பதற்குத் திட்டுத் திட்டாக அடையாளம் இருந்தது. அந்தக் கோட்டு முப்பது வருஷங்களுக்கு முந்திய மாடல். ஒன்றிரண்டு பித்தான்கள் கழன்று பரிதாபமாகத் தொங்கிக் கொண்டிருந்தன. காலர் பக்கத்தில் நைந்து உள்ளே இருந்த வெள்ளைத்துணி வெளியே தெரிந்தது. வலப்பக்கத்து கோட்டுப் டைக்குள் கையைவிட்டு ஒர் அழுக் குத் துணியை-அது அவருடைய கைக்குட்டை-எடுத்து மூக்கை அதில் சிந்திவிட்டு அதனுலேயே முகத்தில் அரும்பியிருந்த வியர்வையையும் துடைத்துவிட்டு, கோட்டுப் பைக்குள்ளேயே அதை அழுத்திப் பத்திரப்படுத்தினர். பாலத்தில் பாதித் துாரம் வந்ததும் வலப்பக்கம் திரும்பிப் பார்த்தார். கைகள் தாமாகக் கூப்பிக் கொண்டன. அது முப்பது ஆண்டுப் பழக்கத்தினல் ஏற்பட்ட செய்கை. பாலத்தின் நடுவில் நின்று பார்த்தால், தாமிரபரணி ஆற்றுக்கு நடுவில் அமைந்திருக்கும். குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில் தூரத்தில் தெரியும். பாலத்தைக் கடந்து போகும்போதும் வரும்போதும் கும்பிட்டுக் கும்பிட்டுப் பழக்கமாகிவிட்ட கைகள், அப்போதும் அவர் அறியாமலேயே தம் வேலையைச் செய்து கொண்ட்ன். ஆளுல் அவரோ கும்பிட்ட உணர்வே இல்லாமல் ம்ேலும் நடந்து கொண்டிருந்தார். இன்று ஏனே மூச்சு வாங்கியது. உள்ளத்திலிருந்த பாரம் அவரை அழுத்தியது. சோர்ந்து போய்த் தள்ளாடியபடியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/86&oldid=1395705" இலிருந்து மீள்விக்கப்பட்டது