பக்கம்:பிள்ளைக்கலி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 5 நன்முக இருக்க வேண்டும். பெற்றவனிடம் காட்டும் பாசத்துக்குக் கூட அனுமதி பெற வேண்டிய இழிவான நிலை, பாவம்...! பொங்கலுக்கு இரண்டு பையன்களும் வந்துவிட்டுப் போன பிறகு வீடு வெறிச்சோடிக் கிடந்தது. பிள்ளைப்பாசம் நெஞ்சைச் சூழ்ந்திருந்தது. ஆனல் அவர்களோ ஏதோ பணம் அனுப்புவார் களாமே...ஆயிரம், ஆயிரமாகச் சம்பாத்தியம். கார், பங்களா சுகபோக வாழ்க்கை தந்தையைத் தன்ளுேடு வைத்திருக்க வேண்டும் என்னும் ஆசை இல்லையே. அதுகூட வேண்டாம். கடமைகூட உணர்வில் தட்டவில்லையே...! ச்ேசீ... நான் அவ்வளவு மானம் கெட்டுப் போகவில்லை. ஒரு காசு வேண்டாம். முப்பது ஆண்டுகளாக எவன் கையையும் எதிர்பார்க்கவில்லை. சொத்து, சுகம் எல்லாவற்றையும் பையன் களின் படிப்புக்கு அர்ப்பணித்து விட்டேன். அது என் கடமை. அதை முடித்து விட்டேன். இதை இருந்து பார்க்கக் கல்யாணிக்குத் தான் கொடுத்து வைக்கவில்லை... சிவராம பிள்ளையின் கண்கள் கலங்கின. மனைவியின் நினைவில் நெஞ்சு வலித்தது. எனக்காக வாழ்ந்த ஒரே உயிர் அவள்தான். இப்போது அவள் இருந்தால் எனக்கு எல்லாம் இருந்த மாதிரிதான். 'கல்யாணி, பார்த்தாயா, உன் பிள்ளைகளை பணம் அனுப்பு வானம், பணம்: வாங்கவர் சொல்கிருய் ? எவ்வளவு மானஸ்தளுக வாழ்ந்தேன். நீயே சொல்லுவியே, ஞாபகம் இருக்கா ? நமக் குன்னு அன்பு செலுத்த உலகத்திலே யாரும் இல்லைன்ன, உயிரை விட்டு விடலாம்' என்பாயே!” சிவராம பிள்ளைக்கு நெஞ்செல்லாம் வலித்தது. நாளையைப் பற்றி நினைத்தார். சூனியம் நிரம்பியிருந்தது. சுற்றுமுற்றும் பார்த் தார். பாலத்தில் பஸ் போக்குவரத்துக்கூட நின்றுவிட்டது. மணி பத்தோ, பதினென்ருே இருக்கும். - தொண்டை வறண்டிருந்தது. மெதுவாக எழுந்தார். அவர் எழுந்து நிற்பதற்குள் நாய் எழுந்து அவருக்கு முன்னல் வந்து நின்றது. வீட்டுக்குப் போகவேண்டும் என்று அதற்கு அவசரம்: பாவம். அதற்குக் கடுமையான பசி, சிவராம பிள்ளை தண்ணிரை நோக்கி நடந்தார். நாய் அவருக்கு முன்ல்ை ஒடியது. ஆற்றுத் தண்ணீரை அள்ளிக் குடித்தார். முகத்தை அலம்பிவிட்டு மீண்டும் பழைய இடத்துக்கே வந்து படுத்துக் கொண்டார். தாய் சிறிது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/93&oldid=1395712" இலிருந்து மீள்விக்கப்பட்டது