பக்கம்:பிள்ளைக்கலி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. கருங்குருவி மீ. ப. சோமசுந்தரம் ‘கருங்குருவி வாங்கலையா கருங்குருவி!' என்று கூவிக் கொண்டே தெருவோடு சென்ருன் பொம்மை வியாபாரி. அவன் தலையிலேயிருந்த கூடையில் அழகழகான சிறு சிறு பொம்மைகள்; அத்தனையும் குருவிகள்! " அப்பா! அப்பா!' என்று பதறியடித்துக் கொண்டே அப்பாவின் அறைக்குள்ளே ஓடினுள் சுந்தரி. 'அப்பா! அப்பா!' அந்தக் குருவிப்பொம்மை வேணும்ப்பா! வாங்கித்தாப்பா!' என்று சுந்தரி அப்பாவைப் பிடித்துக் கொண்டாள். வீட்டிலே கொலு அலங்காரம் நடந்துகொண்டிருந்த சமயம் அது! குழந்தையின் குரலேக்கேட்டு, வீட்டு அம்மாளும் கணவரின் அறைக்குள் வந்தாள். பொம்மைக்காரன் போய்விடப் போகிருன்! கூப்பிடுங்கள்!” என்ருள் அம்மாள். சுந்தரியின் தகப்பனர் நாற்காலியை விட்டு எழுந்து பொம்மைக்காரனைக் கூப்பிட்டார். சுந்தரியோ குதித்தோடிச் சென்று வியாபாரியை எதிர்கொண்டு அழைத்து வந்தாள். "கூடையை ஒரு கை பிடித்து இறக்குங்கள்!” என்ருள் மனைவி கணவரைப் பார்த்து. அவளுக்கும் கொலுவிலே அத்தனை கவனம்! கீழே இறக்கிய ப்ொம்மைக் கூடையை ஆவலோடு சுந்தரி பார்த்தாள். குருவிகள்! விதம் விதமான வர்ணங்களில் வானவில்லிலே வளைகிற வர்ணங்களையெல்லாம் எடுத்து வந்து - மண்ணிலே சேர்த்துப் பூசிவிட்டதுபோல அத்தனை அழகு ? குருவிகளை ஒவ்வொன்ருக எடுத்துக் கீழே வைத்தான் பொம்மைக்காரன்! சட்டென்று பாய்ந்து ஒரு பொம்மையை மட்டும் கையிலே எடுத்தாள் சுந்தரி. அது ஒரு கருங்குருவி. 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/95&oldid=1395714" இலிருந்து மீள்விக்கப்பட்டது