பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜவாஹர்லால் நேரு சிறுவராயிருந்த போது, அவருடைய அப்பாவிடம் ஒரு கணக் குப் பிள்ளை இருந்தார். முன்ஷி முபராக் அலி என்பது அ வ ரு ைடய பெயர். குழந்தை களிடத்தில் அவர் மிகவும் அன்பாக இருப் பார். ஜவாஹர்லாலிடத்தில் அவருக்கு ஒரு தனி அன்பு. முபராக் அலியைக் கண்டதும் ஜவாஹர் ஒடிப்போய் அவரைக் கட்டிப் பிடித்துக் கொள்வார். கதை சொல்லும்படி கேட்பார். முபராக் அலி அரபிக் கதைகளையும், மற்றக் கதைகளையும் நேரிலே பார்த்ததுபோல் கூறு வார். அத்துடன் 1857-ஆம் ஆண்டில் நம் 99