பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசத்தில் நடந்த சுதந்திரப் போரைப் பற்றி பும் சொல்வார். அந்தப் போரிலே அவரு டைய குடும்பத்தைச் சேர்ந்த பலரை ஆங்கி லேயர் கொன்றுவிட்டார்களாம். அதையெல் லாம் கேட்கக் கேட்க நேருவுக்கு வருத்தமா யிருக்கும். ஆங்கிலேயரின் ஆட்சிமீது அவ. ருக்குக் கோபம் கோபமாக வரும். ஏழு, எட்டு வயதுக் குழந்தையா யிருக் கும்போதே, ஜவாஹர்கன்ருகக்குதிரைச் சவாரி செய்வார். அவருக்கு அவருடைய அப்பா அழகான குதிரைக் குட்டி ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தார். தினமும் ஜவாஹர் அதன் மேல் ஏறி, அலகாபாத் நகரை ஆனந்தமாகச் சுற்றி வருவார். அப்போது அலகாபாத்தில் குதிரைப் படையைச் சேர்ந்த குதிரை வீரர் ஒருவர் இருந்தார். அவருடன் சேர்ந்து தின. மும் நேரு குதிரைச் சவாரி செய்வார். ஒருநாள் அரபிக் கதையில் வரும் குதிரை களைப் பற்றி முபராக் அலி ஜவாஹரிடம் கூறிஞர். அந்தக் குதிரைகள் செய்த வீர தீரச் செயல்களைப் பற்றியும், அவை எப்படிப் பறந்து சென்றன என்பதைப் பற்றியும் விவர மாகக் கூறினர். அன்று குதிரைச் சவாரி செய் யும்போது, முபராக் அலி சொன்ன கதைகளை யெல்லாம் குதிரைக் குட்டியிடம் ஜவாஹர் கூறினர். கூறிவிட்டு, கயுேம் அங்தக் குதிரைகளைப் போல் பறக்கவேண்டும். உம் எங்கே பார்க்கலாம்" என்ருர். அதைத் தட்டி 100