பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தட்டிக் கொடுத்தேன். இனி, இது என் தோழன். முரண்டு செய்யாது. தங்தையே, தாங்கள் அனுமதி கொடுத்தால், இந்தக் குதி ரையை நானே வைத்துக் கொள்ளுகிறேன்" என்ருன். அரசரும் சரி என்றர். அந்த அரசகுமாரன் இருபதாவது வயதில் பட்டத்துக்கு வந்தான். பல நாடுகள்மீது படையெடுத்தான். பதின்மூன்று ஆண்டு களுக்குள் திக்விஜயம் செய்து, எகிப்து, பார சீகம் முதலிய நாடுகளை வென்றன். இந்தியா வுக்கும் வந்தான். ஆனால், அதிக நாள் இங்கே தங்கவில்லை. விரைவிலே திரும்பிப் போய்விட்டான். வரும்போது அவனை ஏற்றி வந்த அந்தக் கறுப்புக் குதிரை, போகும்போது அவனுடன் திரும்பிப் போகவில்லை; இந்தியாவிலேயே அது இறந்து விட்டது. அப்போது அவன் அடைந்த துயரத்திற்கு அளவே இல்லை. சொந்த காடு திரும்பியதும், அந்தக் குதிரையின் பெயரால் ஒரு நகரத்தை அவன் அமைத்தான். அவன் பெயரிலும் இன்று எகிப்து காட்டில் ஒரு பெரிய நகரம் இருக் கிறது. அலெக்ஸாந்திரியா என்பது அந்த ககரத்தின் பெயர். அப்படியானுல் அவன் பெயர். ه ه او و هاه * ஆம், மகா அலெக்லாந்தர்! 40