பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படி யெல்லாம் செய்தார். ஆனலும், அதிக காட்கள் அங்கே அவர் தங்கி யிருக்கவில்லை. ஒரு நாள் அந்த மடத்தில் இருந்த ஒரு லாமாவுக்கும், டென்சிங்கிற்கும் தகராறு ஏற்பட்டது. கோபத்தில் அக்த லாமா ஒரு கட்டையைத் துக்கி டங்’ என்று டென்சிங். கின் மொட்டைத் தலையில் போட்டுவிட்டார். அடி விழுந்ததுதான் தாமதம், டென்சிங் அந்த இடத்தை விட்டு வெகு வேகமாக வீட் டுக்கு ஓடினர். கடந்ததை அப்பாவிடம் கூறி ஞர். 'இனி அந்த மடத்துப் பக்கம் தலை காட்டவே மாட்டேன்" என்று கூறிவிட்டார். சில காட்கள் சென்றன. ஒருநாள் வீட் டில் யாரிடத்திலும் சொல்லாமல் ஊரை விட் டுப் புறப்பட்டு விட்டார். இமயமலையில் பல பகுதிகளிலும் சுற்றித் திரிந்தார். பிறகு, மலை ஏறும் குழுவினருக்கு மூட்டை துக்கும் கூலி யாக இருந்தார். கடைசியில் ஹில்லரி என்ற வெள்ளைக்காரருடன் சேர்ந்து எவரெஸ்ட் சிக ரத்தையே எட்டிப் பிடித்துவிட்டார். அன்று, டென்சிங்கின் மொட்டைத் தலை யில் கட்டையால் அடித்தாரே ஒரு லாமா, அவ ருக்கு நாம் நன்றி சொல்லவேண்டும். இல் லாத போனல், டென்சிங் எவரெஸ்ட் சிகரத் தில் ஏறியிருப்பாரா? அ ங் கே இந்தியக் கொடியை காட்டியிருப்பாரா? அவரும் ஒரு லாமாவாகத்தானே இருந்திருப்பார்? 122