பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதங்கள் தண்டால், பஸ்கி, ஒட்டம் முதலிய கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்தான். எடை ஏறியது. ஆருவது மாதம், அவனை ராணுவத்தில் கடற்படையிலே சேர்த்துக் கொண்டு விட்டார்கள். விரைவிலே அவன் யுத்தப் படகு ஒன்றின் தலைவனைன். ஒரு சமயம், அவனுடைய படகு இரண் டாக உடைந்து உயிருக்கு ஆபத்து ஏற்பட் டது. அவன், தான் தப்பியதோடல்லாமல், தன் நண்பர்களையும் வீரமுடன் காப்பாற் றினன். அவனுடைய வீரத்தைப் பாராட்டி, ராணுவத்தினர் அவனுக்கு விருது வழங் கினர்கள். சிறந்த வீரகை மட்டுமல்ல; சிறந்த எழுத் தாளனுகவும் அவன் விளங்கினன். "தீரர்கள் வாழ்க்கை என்ற அவனுடைய புத்தகத்திற் குப் பெரிய பரிசு ஒன்றும் கிடைத்தது. அவனது தங்தை கூறியதுபோல், அவன் ரானுவத்திலே சிறந்து விளங்கினன்; புத்த கம் எழுதுவதிலே சிறந்து விளங்கின்ை. இவை மட்டுமா? அமெரிக்காவின் ஜனதி பதியாகவும் அவன் சிறந்து விளங்கினன். ஆம், அமெரிக்காவின் 35-வது ஜனதிபதியாக 43-வது வயதிலே தேர்ந்தெடுக்கப் பெற்ற ஜான் எப். கென்னடிதான் அந்தச் சிறுவன். அமெரிக்க ஜனதிபதியாக விளங்கியவர்களில் கென்னடிதான் மிகவும் இளமையானவர்! 126