பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடைசியில் அரசன் ஒரு படையை அவளு டன் அனுப்பின்ை. ஆனைப் போல அவள் போர் உடை தரித்துக் கொண்டாள். குதிரை மீது ஏறி எதிரிகளைத் தாக்கப் புறப்பட்டாள். அச்சிறுமியின் நாட்டுப்பற்று, է Յ65: உறுதி, விடா முயற்சி முதலியவற்றைக் கண் டனர் பிரெஞ்சு வீரர்கள். அவர்களுக்கும் ஒரு புத்துணர்ச்சி பிறந்தது. வீரமுடன் போர்க் களத்தில் இறங்கினர். அவள் தலைமையில் சண்டையிட்டனர். முதல் போரிலே வெற்றி கிடைத்தது. பல இடங்களில் அவள் ஆங்கிலேயருடன் போர் புரிந்தாள், இரு முறை அவள்மீது அம்பு பாய்ந்தது. உட லெல்லாம் இரத்தம் அப்படியிருந்தும் அவள் போரை நிறுத்தவில்லை. தொடர்ந்து போரிட் டாள். பலமுறை வெற்றி பெற்ற அவள் கடைசியில் ஒரிடத்தில் தோல்வி அடைந்தாள். காரணம், சொந்த காட்டினரே அவளுக்குத் துரோகம் செய்துவிட்டார்கள்! தோற்றுப் போன அவளை எதிரிகள் சிறையில் அடைத்தார்கள்! அவள் மீது வழக்குத் தொடுத்து, அவளைக் குற்றவாளி என்ருர்கள். பிறகு, சங்தை கூடும் இடத்தில் ஒரு கம்பத்திலே அவளேக் கட்டிவைத்துச் சுற்றிலும் தீ வைத்தார்கள். 19 வயதிலே அவளை எரித்துவிட்டார்கள்! அவளது உடலை எரித்தாலும், அவளது பெயரை எரிக்க முடிக் ததா? ஜோன் ஆப் ஆர்க் என்ற பெயர் இன்று சரித்திரத்தில் நிலைத்துவிட்டதே! 14