உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் நடக்கும், ஆகையால், தயவு செய்து விரைவில் அழைத்துப் போய் விடு.” கடிதம் முழுவதையும் படித்து முடித்த தும், பூ இதற்குத்தான இப்படி எழுதி யிருக்கின்ருள். என்னவோ ஏதோ என்று பயந்து போனேன்" என்று கூறிச் சிரித்தாள் அந்த அம்மாள். இப்படிச் சிறிய வயதிலே கதை சொல் வதில் வல்லவனுக இருந்த அவன், பெரியவ னைதும், பெரிய கதாசிரியனுகி விட்டானே? பன்னிரண்டு வயதுப் பையனுக இருக் கும்போது, அவன் அடுப்புக்குப் பக்கத்திலே போய் உட்கார்ந்து கொள்வான். கேத்தலில் நீர் கொதித்துக் கொண்டிருக்கும். கன்ருகக் கொதித்தவுடன் கேத்தலின் முக்கு வழியாக "குப்குப் என்று ஆவி வெளிவருவதைப் பார்ப்பான். "இந்த ஆவி வெளியில் வராதபடி கேத் தலின் மூக்கை அடைத்துவிட்டால், என்ன கடக்கும்?' என்று ஒரு நாள் எண்ணினன். உடனே அந்த மூக்கை மூடினன். அப்போது நீராவியால் வெளியில் வர முடியவில்லை. சிறிது நேரம் சென்றது. கேத்தலின் மூடி மெல்ல அசைய ஆரம்பித்தது. அப்போது சிறிது இடைவெளி ஏற்பட்டது. நீராவி கொப்புளித்துக்கொண்டு வெளியே வந்தது. 25