பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்க வேண்டும். இனி, அவரையும் பார்க்க முடியாது’ என்ற முடிவுக்கு வந்தான். இப்படி பத்து வயதுவரை ஒன்றும் அறியாத குழந்தையாக இருந்த அவன், உல கம் போற்றும் ஒரு பெரிய ஞானியாகி விட் டான். ரஷ்ய ஞானி டால்ஸ்டாய் என்ருல், ஒ, அவரா காந்தி மகானே தம்முடைய குரு எனக் கொண்டாடியவரல்லவா அவர்?’ என்று கூறத் தொடங்கிவிடுவீர்கள். ஆம், பெரும் பணக்காரக் குடும்பத்திலே, 42 அறைகள் கொண்ட மாளிகையிலே அவர் பிறந்தார்; தம்முடைய நிலங்களையெல்லாம் ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டு, ஏழையோடு ஏழையாக வாழ்ந்தார். நூற் றுக்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதி மக் களுக்கெல்லாம் வழிகாட்டியாகத் திகழ்ந்தார். அந்தப் புத்தகங்களின் மூலம் நிறைய வருமானம் வந்திருக்கும் என்றுதானே கினைக் கிறிர்கள்? இல்லை. அவர் வருமானத்திற் காக எழுதவில்லை. தாம் எழுதிய புத்தகங் களே யார் வேண்டுமானலும், எந்த மொழியில் வேண்டுமானுலும் இலவசமாக வெளியிட்டுக் கொள்ளலாம் என்று அவர் கூறிவிட்டார். அவரைப் பற்றி இதுவரை வெளி வங்துள்ள புத்தகங்கள் சுமார் 25,000 இருக்கலாம். அப்படியென்ருல், அவர் எவ்வளவு பெரிய மகான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? 34