பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று ஜான் ஆசைப்பட்டான். ஆல்ை, உலகிலேயே, மிகமிகப்பெரிய கோடிஸ்வரனுக அவன் ஒரு காலத்தில் விளங்கப் போகிருன் என்பது அப்போது யாருக்குத் தெரியும்? அவனுக்கே தெரியாதே! மிகப் பெரிய கோடீஸ்வரனுக விளங்கிய தோடல்ல; மிகப் பெரிய கொடையாளியா கவும் அவன் விளங்கின்ை. ஜான். டி. என்று சொன்னல் அமெரிக்கர் அனைவருக்கும் நன்ரு கத் தெரியும். ஜான். டி. ராக்பெல்லர் என்று சொன்னுல், உலகின் பல பகுதிகளில் உள்ள வர்களுக்கும் கன்ருகத் தெரியும். ஸ்டாண்டர்ட் ஆயில் கம்பெனி என்ற எண்ணெய்க் கம்பெனியைத் தொடங்கி அவர் லட்சம் லட்சமாகச் சம்பாதித்தார். பெட்ரோல், இருப்புப் பாதை முதலியவற்றின் மூலமாக, மொத்தம் அவர் சம்பாதித்த தொகை 100 கோடி டாலருக்குமேல் இருக்கும் என்கி ருர்கள். (அதாவது கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய்.) சம்பாதித்ததில் பாதிக்குமேல் அவர் கன்கொடையாக வழங்கிவிட்டார். அவரால் 1913 இல் நிறுவப்பட்ட ராக்பெல்லர் பவுண்டேஷன் இன்று எத்தனையோ நல்ல காரியங் களுக்கு உதவி வருகிறது. கல்வி, மருத்துவம், விஞ்ஞான ஆராய்ச்சி முதலிய பல துறை களிலும் உலகின் பல பாகங்களிலும்,தொண்டு செய்து வருகிறது. - 37