உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராக்பெல்லர், உயர்நிலைப் பள்ளியுடன் படிப்பை முடித்துக் கொண்டவர். பல்கலைக் கழகப் படிப்பை அவர் எட்டிக்கூடப் பார்த்த தில்லை. ஆலுைம், சிகாகோ பல்கலைக் கழகத்திற்கு அவர் ஒரு கோடி பவுனுக்குமேல் கொடுத்திருக்கிருர்! ராக்பெல்லர் எதிலுமே அவசரப்பட மாட் டார்; ஒருபோதும் ஆத்திரப்படமாட்டார். பகல் சாப்பிட்டவுடன் அரைமணி நேரம் படுத் துத் துரங்குவார். இவற்ருல்தான் அவர் 97 வயதுவரை இந்த உலகில் ஆரோக்கியத் துடன் வாழமுடிந்ததாம். அவர் இறங்தபோது பல் இல்லாத கிழவராக இறக்கவில்லை. 32 பற். களும் அப்படியே ஆடாமல் அசையாமல் இருங் தனவாம்! அவற்றில் ஒன்றுகூடப் பொய்ப் பல் இல்லை. அவரிடம் சில கண்டிப்பான பழக்க வழக்கங்கள் இருந்தன. அவர் சீட்டாட மாட்டார்; திரைப்படம் பார்க்கமாட்டார்; புகை பிடிக்க மாட்டார்; மது அருந்தமாட்டார். கோடீஸ்வரரான பிறகும், வான்கோழியை ராக்பெல்லர் மறக்கவே இல்லை. 8000 ஏக்கர் கிலத்தில் வான்கோழிப் பண்ணை ஒன்றை ஏற். படுத்தினர். ஏராளமான வான்கோழிகளை அதில் வளர்த்து வந்தார். ஒரு காலத்தில் ஏழையாக இருந்து வான்கோழி வியாபாரம் செய்ததை கினைவுபடுத்திக் கொள்ளவே அவர் அவ்வாறு செய்தாராம்! 38