பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனல், அதே வாலிபனுக்கும், அதே சிறுமிக்கும் மூன்று ஆண்டுகள் கழித்துத் திருமணம் நடக்கப் போகிறது என்பதை அன்று யாரும் அறியவில்லை. திருமணம் கடங்தபோது அச்சிறுமிக்கு வயது 6. அந்த வாலிபனுக்கு வயது 23. "என்ன இது! ஆறு வயதுச் சிறுமிக்குக் கல்யாணமா!" என்று ஆச்சரியப்பட வேண் டாம். அங்தக் காலத்தில், பெண்களுக்கு ஆறு, ஏழு வயதிலும் பையன்களுக்குப் பத்து, பன் னிரண்டு வயதிலும் திருமணம் செய்வது வழக்கமாயிருந்தது. அப்படியால்ை, அந்த வாலிபனுக்கு ஏன் இருபது வயதுவரை திரு மனம் ஆகவில்லை?” என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? அவனை அரைப் பைத்தியம் என்றே பெரும்பாலோர் கினைத்தார்கள். ஆல்ை, உண் மையில் அவன் பைத்தியக்காரனல்ல. எப் போதும் அவன் கடவுளையே கினைத்துக் கொண்டிருப்பான். பக்திப் பாடல்களை வாய்க் குள்ளே பாடிக்கொண்டிருப்பான்; யாருட னும் அதிகமாகப் பேசமாட்டான். அவனைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள், பைத் தியம்' என்றே முடிவுகட்டி விட்டனர். பைத்தியத்துக்கு யாரா வ து பெண் கொடுப்பார்களா? பெண் கொடுக்கமாட் டோம் என்று எல்லோரும் கூறிவிட்டார்கள், 45