பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஸ்வேஸ்வரய்யாவின் அப்பாவோ மிக வும் ஏழை. ஏழைப்பிள்ளை சம்பளம் கொடுத்து வீட்டுப் பாடம் வைத்துக்கொள்ள முடியுமா? அந்த ஆசிரியரின் அன்பாலும் ஆதரவாலும் தினமும் மாலை வேளையில் அங்கே சென்று படித்து வருவார். கீழ் வகுப்பில் படிக்கும் போது அவர் ஆசிரியர் வீட்டுக்குப் போய்ப் பாடம் படித்து வந்தார். மேல் வகுப்புக்குச் சென்றபின் அவரிடம் சில மாணவர்கள் பாடம் படித்து வந்தார்கள். ஆம், ஏழையாக இருந்ததால் அவர் கல்லூரியில் படிக்கும்போது கீழ் வகுப்பு மாணவர் சிலருக்கு வீட்டுப் பாடம் சொல்லிக்கொடுத்து வந்தார். அதில் கிடைத்த வரும்படியைக் கொண்டுதான் அவரா ல் கல்லூரியில் படிக்க முடிந்தது. ஆரம்பப் பள்ளியில் நாதமுனி நாயுடு எவ்வளவு அன்பாக இருந்தார்! அதேபோல், கல்லூரியில் படித்தபோது கல்லூரி முதல்வ. வரான சார்லஸ் வாட்டர்ஸ் என்ற ஆங்கிலேயர் விஸ்வேஸ்வரய்யாவிடம் மிகவும் பிரியமா யிருந்தார். விஸ்வேஸ்வரய்யாவின் புத்தி நுட் பம், கடமை உணர்ச்சி, கல்லொழுக்கம் முதலியவற்றை, அவர் அடி க்க டி. பாராட் டுவார். ஒரு சமயம் அவர் விஸ்வேஸ்வரா, இதோ இந்த அகராதியை என் அன்பளிப் பாக ஏற்றுக்கொள். உனக்கு உதவியாயிருக் 61.