பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும் , என்று கூறி வெப்ஸ்டர் அகராதி ஒன் றைக் கொடுத்தார். வாட்டர்ஸ் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்ற பிறகும் விஸ்வேஸ்வரய்யா அவரை மறக்கவில்லை. பேரும் புக மு ம் பெற்ற பிறகு இங்கிலாந்துக்கு அவர் அடிக் கடி செல்வதுண்டு. அப்போதெல்லாம் அவர் வாட்டர்ஸ் வீட்டுக்குப்போய் அவரைக் கண்டு தமது மரியாதையைத் தெரிவித்து வருவார். வாட்டர்ஸ் இறப்பதற்கு முன்பு தம் முடைய மனைவியை அருகிலே அழைத்தாராம். கான் இறந்த பிறகு, நீ இந்தக் கைப்பொத் தான்களை எடுத்துக்கொண்டு இந்தியா செல்லவேண்டும். அங்குள்ள என் மாண வராகிய சர். விஸ்வேஸ்வரய்யாவிடம் என் நிஜனவாக இவற்றைச் சேர்ப்பிக்க வேண்டும்” என்று கூறி, தங்கத்தால் ஆன ஒரு ஜோடி கைப்பொத்தான்களைக் கொடுத்தாராம். அவர் விரும்பியதுபோல், அந்த அம் மையார் இந்தியா வந்து விஸ்வேஸ்வரய்யா விடம், அப்பொத்தான்களைக் கொடுத்தாராம். விஸ்வேஸ்வரய்யா கடைசி காலம்வரை அங் தப் பொத்தான்களைக் கண்ணேபோல் கருதிப் போற்றி வந்தார். மாணவரிடத்திலே ஆசிரியருக்கு எத் தகைய அன்பு: ஆசிரியரிடத்திலே மாண வருக்கு எத்தகைய பக்தி 62