பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணன் பெயர் விளாதிமிர். தங்கை பெயர் ஒல்யா. இருவரும் எப்பொழுதும் ஒன்ருகவே விளையாடுவார்கள். தோட்டத்தில் அண்ணன் ஒடுவான்; தங்கை அவனைத் துரத்துவாள். மரத்தின்மீது அவன் விறுவிறு என்று ஏறு வான். அவளும் தட்டுத் தடுமாறி எப்படியோ ஏற முயலுவாள். அவன் கிளை வழியாக கடந்து சென்று, தொப்பென்று கீழே குதிப் பான். அவள் மரத்தைவிட்டு இறங்கி மீண் டும் துரத்துவாள். இப்படியே இருவரும் ஒடிப் பிடிக்கும் விளையாட்டில் மும்முரமாக ஈடுபடுவார்கள். 79