பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்க்குள்ளே போட்டான். அ ப் போ து அவன் உடல் நடுநடுங்கியது. வியர்வை கொட்டியது. அதற்குமேல் அவல்ை அங்கு இருக்க முடியவில்லை. எழுந்து வீடு வந்து சேர்ந்தான். அன்று இரவு முழுவதும் மோகனுக்குத் துரக்கம் வரவில்லை. கண்களை மூ டி ைல் போதும், வயிற்றுக்குள்ளே ஓர் ஆடு வந்து கிற்பதுபோல் இருக்கும். அது சும்மா நிற் காது. மே, மே' என்று கத றும் அப்போது மோகனின் உள்ளம் படாதபாடு படும். பரம சாதுவான ஆட்டைக் கொன்று தின்பதா ? சே, இனி உயிருள்ளவரை மாமிசத்தைத் தொடமாட்டேன்' என்று அப்போது அவன் உறுதி எடுத்துக்கொண்டான். சாகும்வரை அவன் எந்த உயிரையும் கொன்று தின்றதில்லை. அது மட்டுமா ? எந்த உயிருக்கும் தீங்கு செய்ததும் இல்லை; தீங்கு நினைத்ததும் இல்லை. - மாமிசம் சாப்பிட்டால்தான் ஆங்கிே யரை விரட்ட முடியும், சுதந்திரம் பெற முடி யும் என்று சொன்னனல்லவா அந்த கண் பன் ? ஆல்ை, மாமிசம் சாப்பிடாமலே, அன்பு வழியில் ஆங்கிலேயரிடமிருந்து நமக்கு விடு தலை வாங்கித் தந்தான் அந்த மோகன் ! அந்த மோகன் யார் என்பது உங் களுக்கா தெரியாது ! - கம் தேசத் தந்தை மோகனதாஸ் கரம்சந்த் காந்தியேதான் ! 78