பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்ன வயதிலே, அரவிந்தர் நிறைய கிறைய ஆங்கிலப் புத்தகங்கள் படிப்பார். ஆங்கிலக் கவிதைகளைப் படிப்பதில், அவ ருக்கு ஒரு தனி விருப்பம். கவிதைகளைப் படிப்பதோடு அவர் கிற்கவில்லை; சொந்த மாகக் கவிதைகள் எழுதவும் ஆரம்பித்தார். இங்கிலாந்தில் இருந்தபோது, அரவிங் தரை எப்படியாவது கிறிஸ்தவ மதத்தில் சேர்த்து விடவேண்டும் என்று அந்தப் பாதிரி யாரின் தாயார் முயற்சி செய்தாள், ஆனல், பாதிரியார் அதற்கு இடம் கொடுக்கவில்லை. பத்து வயதுப் பைய ையிருந்தபோது அரவிந்தரை ஒரு நாள் மாதா கோயிலுக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள். மாதா கோயி லில் ஏராளமான கூட்டம். எல்லோரும் விதம் விதமான உடைகள் உடுத்திப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் பிரார்த்தனை முடிந்தது. கூட்டமும் கலைந்தது. ஆலுைம், சிலர் மட் டும் அங்கேயே தங்கியிருந்தார்கள். அவர்கள் பிற மதத்தைச் சேர்ந்தவர்கள்; கிறிஸ்தவ மதத்தில் சேருவதற்காகவே வங்திருந்தார்கள். அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந் தார் அரவிந்தர். - அப்போது மதகுரு அரவிந்தரைப் பார்த் துச் சில கேள்விகள் கேட்டார். அரவிந்தர் பதில் எதுவும் கூறவில்லை. மெளனமாகவே கின்ருர், 85