பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மையாரையும் ஏற்பாடு செய்தார். அந்த அம். மையார் ஆங்கில மொழியையும், ஆங்கிலேய ரின் பழக்க வழக்கங்களையும் அந்தப் பிள்ளை களுக்குச் சொல்லிக் கொடுத்தார். இப்படியிருந்தும் டாக்டர் கோஷாக்குத் திருப்தி ஏற்படவில்லை..."என்ன இருந்தாலும் இங்கிலாந்தில் படிப்பது போல் ஆகுமா ...' என்று அவர் அடிக்கடி கினைப்பார். அவருக்கு ஒரு வெள்ளைக்கார நீதிபதி யைத் தெரியும். அந்த நீதிபதியிடம் தம் முடைய ஆசையை வெளியிட்டார். உடனே அந்த நீதிபதி, பிள்ளைகள் படிப்பைப் பற். நிக் கவலைப்பட வேண்டாம். என் உறவினர் ஒருவர் மாஞ்செஸ்டர் நகரில் பாதிரியாராக இருக்கிருர். அவர் வீட்டில் உங்களுடைய மூன்று பிள்ளைகளும் தங்கிப் படிக்கலாம்.” என்ருர். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் அவரே செய்தார். மூன்று பிள்ளைகளையும் இங்கிலாந்துக் குத் தனியாக அனுப்பலாமா ? டாக்டர் கோஷ-ம், அவருடைய மனைவி யும் பிள்ளைகளோடு இங்கிலாந்துக்குப் புறப் பட்டார்கள். மாஞ்செஸ்டர் நகரை அடைங் தார்கள். அங்கே, பாதிரியாரிடம் குழந்தை களை ஒப்படைத்தார்கள். சில நாட்களில், பிள்ளைகளை அங்கே விட்டுவிட்டு, இந்தியா வுக்குத் திரும்பினர்கள். 84