பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐன்ஸ்டின் எ ன் ரு ல், அடேயப்பா அவர் பெளதிகத்துக்குப் புத்துயிர் அளித்த மேதை பல்லவா! மிகப் பெரிய கணித நிபுணரல்லவா! நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியல்லவா !” என்றெல்லாம் பாராட்டத் தொடங்கி விடு வீர்கள் ! ஆனல், ஐன்ஸ்டினுக்குப் பாராட்டு என் ருலே பிடிக்காது. எப்போதும் அடக்கமாக வும், அமைதியாகவும், எளிமையாகவும் அவர் இருப்பார். ஒருநாள், பெர்லின் நகரில் டிராம் வண் டியில் ஐன்ஸ்டின் பயணம் செய்துகொண் டிருந்தார். அப்போது, டிராம் கட்டணம் செலுத்த அவரிடம் சில்லறை இல்லை. ஆகை யால், கோட்டு ஒன்றைக் கண்டக்டரிடம் நீட் டினர். கோட்டைப் பெற்றுக்கொண்ட கண் டக்டர், கட்டணம் போக மீதிச் சில்லறையை ஐன்ஸ்டினிடம் கொடுத்தார். சில்லறை சரி யாகத்தான் இருந்தது. ஆனலும், எங்கோ கவனமாக இருந்த ஐன்ஸ்டின் சில்லறையை எண்ணிப் பார்த்துவிட்டு, என்னப்பா, சரி யாக இல்லையே!" என்ருர். கண்டக்டருக்குக் கோபம் வந்துவிட் டது. எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. சாதாரணக் கூட்டல் கழித்தல்கூடத் தெரிய வில்லையே, உமக்கு ' என்று சீறி விழுந்தார். அவர் ஒரு பெரிய கணித மேதை என் பது, பாவம், அப்போது அந்தக் கண்டக்டருக் குத் தெரியாது ! 94