வித்தக விநாயகர் 2 வதற்கு ஆள் இல்லையே என்று நாங்கள் வருந்திக் கொண்டிருந்தபோது, விருந்தினராகத் தாங்கள் வந்தீர்கள். அதனால் எங்களுக்கு ஒரே மகிழ்ச்சி, அதனால்தான் அப்படிச் சிரித்து உம்மை வரவேற்றோமே அல்லாமல், உம்முடைய யானை முகத்தையும், தொந்தி வயிற்றையும், குட்டைக் காலால் நீர் நடந்து வரும் அழகையும் கண்டு கேலி பண்ணிச் சிரிக்கவே இல்லையே! என்று பேசுகிறாள். கோபமாக இருக்கும் பிள்ளையாரைச் சமாதானப்படுத்தும் பாவனையில், அவர்கள் உண்மையிலே எதற்காகச் சிரித்தார்கள் என்பதையும் நல்ல நகைச் சுவையோடு, சொல்லாமல் சொல்லிவிடுகிறாள் இந்தப் பெண். இதைச் சொல்கிறது ஒரு பாட்டு விருந்து விளிப்போம் எனக்கருதும் வேளை அடிகேள், இவண் நீயே விரும்பி வந்தாய் என மகிழ்ச்சி மீக்கூர்தலினால் செவ்வாயின் முருந்து தோன்ற முறுவலித்தேம் அல்லால் ஒருநின் கரிமுகம் போல்முகமும், பூதப் பெரு வயிறும், முடங்கும் குறள்தாள் தகு நடையும் இருந்தவாறு நோக்கி நகைத்திட்டேம் அல்லேம். என்று அழகாகப் பாடுகிறார் கவிஞர். இப்படி எல்லாம் மற்றவர்களை ஹாஸ்யத்திற்கு உள்ளாக்கி, தானுமே அந்த ஹாஸ்யத்திற்கு உட்பட்டு இருக்கும் பிள்ளையாரை வித்தக விநாயகர் என்று கூறாமல் வேறு என்ன பெயரிட்டு அழைப்பது? வித்தகர் என்றால் ஞானவான், சாமர்த்தியசாலி, அதிசய புருஷர் என்றுதானே பொருள்.
பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/12
Appearance