விநாயகரது திருஉருவங்கள் 12 ஒன்றிருக்கிறது, நாகபட்டினம் நீலாயதாகூ அம்மன் கோயிலிலே. அதன் திருவுருவத்தையும் இச்சிறு நூலிலேயே காணலாம், இப்படி எத்தனை எத்தனையோதிருவுருவங்கள். என்றாலும் பிள்ளையார்பட்டியில் அமைந்தள்ள விநாயகர் திருவுருவத்துக்குச் சில சிறப்பியல்புகள் உண்டு என்பதை மறுக்க முடியாது. இங்குள்ள விநாயகரது துதிக்கை வலம் சுழித்து, அவருக்கு வலம்புரி விநாயகர் என்ற பெயரைத் தேடித் தருகிறது. எல்லா இடத்தும் நான்கு திருக்கரத்தால் நான்கு திக்கிலும் ஆட்சி செய்பவர், இங்கு இரண்டே திருக்கரத்தால் விண்ணையும் மண்ணையும் ஆட்சிக்குள் கொண்டுவந்து விடுகிறார். அங்குசமும், பாசமும் இல்லாமலே, அடியவரை ஆட்சிகொள்ளும் சக்தி உடையவராக இருக்கிறார். வயிற்றை ஆசனத்தில் படியவிடாமல் அர்த்த பத்ம ஆசனத்திலேயே கால்களை மடித்திருக்கச் செய்து கொள்கிறார். வலக்கரத்தில் மோதகம் தாங்கி, இடக்கரத்தை இடையில் பொருத்தி பெருமிதத் தோற்றத்தோடு காட்சி கொடுக்கிறார். ஆதி நாளிலே இப்படி இரண்டு திருக்கரத்தோடு உருவானவர்தான், பின்னர் நான்கு திருக்கரங்களோடு எழுந்து நின்று, நடந்து நடமாடி முவழிகத்திலும், சிம்மத்திலும் ஏறிச் சவாரி செய்பவராகக் கலைஞன் சிந்தனையிலே வளர்ந்திருக்கிறார். தடக்கை ஐந்து உடைத் தாழ் செவி நீள்முடிக் கடக் களிற்றைக் கருத்துள் இருதுதுவாம் - சேக்கிழார்
பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/22
Appearance