விநாயகரது திரு உருவங்கள் 11 நிலந்துளங்க, மேருத்துளங்க நெடுவான் நலந்துளங்க சப்பாணி கொட்டும் - கலந்து உளங்கொள் காமாரி ஈன்ற கருங்கைக் கடதடத்து மாமாரி ஈன்ற மணி என்பதுதானே பாட்டு. இந்த அற்புதத் தத்துவத்தை விளக்கும் அழகிய திரு உருவம்தான் நர்த்தன விநாயகர் அந்தத் திரு உருவங்களில் இரண்டைத் தான் பார்க்கிறீர்கள் இச்சிறு நூலிலே. ஒன்று வேதாரண்யத்திலே யாழைப் பழித்த மொழி மங்கை பங்கன் கோயிலிலே. இது செப்புச் சிலை. அழகான திருவுரு, மற்றொன்று கற்சிலை. இந்தச் சிலை அன்று இருந்தது தாராசுரம் கோயிலிலே, இன்று இருக்கிறது தஞ்சைக் கலைக்கூடத்திலே, வென்றாடு திருத்தாதை வியந்து கைதுடிகொட்ட நின்றாடும் மழகளிறாக இவ்விரண்டு திருவுருவங்களும் காட்சி கொடுக்கின்றன. நமக்கு இருந்த திருக்கோலத்தில் இருந்தவரையே, எழுந்து நடமாடும் கோலத்திலும் கண்டு களிக்கிறோம். இன்னும் அவரையே, மூஷிக வாகனத்தில் ஏறி சவாரி செய்துகொண்டு அவசரம் அவசரமாக எங்கேயோ ஒடும் கோலத்திலும் காணலாம். அப்படி ஒடும் கணபதிதான் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் கல்யாண மண்டபத்திலே ஒரு கல்த்துணிலே இருக்கிறார். ஆம் அந்தக் கல்யாண மண்டபத்துச் சிற்பங்களை எல்லாம் கண்டு களித்த மேலைநாட்டு ரஸிக வைஸ்ராய் ஒருவர், மண்படத்தையே பெயர்த்து, தூண்களை யெல்லாம் எடுத்து கப்பலில் ஏற்றி, ஆங்கில நாட்டுக்கு கொண்டுபோய் அங்கே திரும்பவும் மண்டப்பத்தை கட்டி முடிக்கத் திட்டமிட்டுவிட்டார். இந்தத் திட்டம் நிறைவேறாமல் போகத்தான், இத்தனை விரைவில் இந்தப் பிள்ளையார் ஓடியிருக்கவேணும். திட்டமிட்டபடி கப்பல் வந்து சேரவில்லை. கல்யாண மண்டபமும் கப்பலில் ஏறவில்லை. எல்லாம் இந்த மூஷிக வாகனர் செய்த வேலை காரணமாகத்தான். இன்னுமொரு திருவுருவம் ஹேரம்ப கணபதி என்ற பெயரோடு, இவரையே பஞ்சமுக விநாயகர் என்று அழைக்கிறார்கள் மக்கள். ஒற்றை முகமும், ஒரு கோடும் உடையவர் மூஷிக வாகனத்தில் சவாரி என்றால், ஐந்து முகமும் அதற்கேற்ற கரங்களும் உடையவர் ஏறிச் சவாரி பண்ணவேண்டுவது சிம்ம வாகனத்தில்த்தானே? இந்தத் திருவுருவத்தை எல்லா இடத்திலும் காண்பது இயலாது. செப்பு விக்கிரஹ உருவில்
பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/21
Appearance