பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

னும் ஷார்க் ஸ்கின்னுமாகப் பளபளக்கும் கும்பலுக்கு மத்தியில் கைத்தறிச் சட்டையும் நிஜாருமாக ஒரு மூலையில் சிதம்பரம் உட்கார்ந்து கொண்டிருந்தான்.

புருஷோத்தமனுக்கு அதற்கு மேல் வாயும் கையும் ஓடவில்லை. நூற்றைம்பது ரூபாயை வாங்கிக்கொண்டு போய் என்ன செய்தான்?

எல்லோரும் சாப்பிட்டானதும், சிதம்பரத்தைத் தனியாக அழைத்துக்கொண்டு போய் ரகசியமாகக் கேட்கவேண்டும் என்று அவர் எண்ணிக்கொண்டிருக்கும் போதே, கை அலம்பினதும் அவன் பாட்டியையும் அழைத்துக்கொண்டு பூஜை அறைக்குள் போனான் சிதம்பரம். என்னவோ ஏதோ என்று, குழந்தைகள் படையும் பெரியவர்கள் கோஷ்டியும் கும்பலாகக் கூடவே பூஜையறையில் வந்து சேர்ந்தன.

சுவாமி படத்திற்கு முன்னால் ஒரு பெரிய பொட்டலம் இருந்தது. சிதம்பரம் அதைப் பிரித்தான்.

மறுகணம் புருஷோத்தமன், அப்படியே அசந்து நின்றுவிட்டார். அத்தனையும் கம்பளித்துணிமணிகள்: தலைக்கும் கழுத்துக்கும் உடம்புக்கும். காலுக்கும் அணிந்து கொள்ளக்கூடிய துணிமணிகள். அததனையும் ராணுவ வீரர்களுக்காக!

புருஷோத்தமனின் உடம்பெல்லாம் மயிர்க்கூச் செறிந்தது. அப்படியே சிதம்பரத்தை எடுத்து மார்போடு அணைத்துக்கொண்டு முத்தமாரி பொழிந்தார். குடும்பத்தில் வீரன் கிடைத்துவிட்டான்!

ரேடியோவில் எல்லோரும்தான் செய்தி கேட்டார்கள். அதில் சிதம்பரத்தின் செவியில் விழுந்த செய்தி எவ்வளவு வேகத்தோடு எழுந்து, செயல்பட்டு அதன் உரிய பயனை அடைந்துவிட்டது.