பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

டார். உடனே அவர், "உன்னிடம் ஏது சிதம்பரம் இவ்வளவு பணம்? நான் 150 ரூபாய்தானே கொடுத்தேன்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

சிதம்பரம் சிரித்துக்கொண்டே, "பாக்கி எல்லாம், இதோ, இங்கே நிக்கறாங்களே இவங்ககிட்டே நான் தீபாவளி இனாமாக கேட்டு வாங்கிக்கொண்டது" என்றான். அங்கிருந்த அண்ணா, அத்திம்பேர், அக்கா ஆகிய எல்லோருடைய முகத்திலும், ஒரு மகிழ்ச்சியும் உள்ளத்தில், தாங்களும் - சிதம்ப்ரத்திற்கு இனாம் கொடுத்தன் மூலம் ஒரு பெரிய தியாக வேள்வியில் உதவிய நிறைவும், சுடர் விட்டன.

அப்போது ஸ்ரீமதி புருஷோத்தமன் சிதம்பரத்தைப் பார்த்து, "ஏண்டா, நீ என்னிடம் மட்டும் வந்து இனாம் கேட்கவில்லை? உனக்கு இந்தப் பாட்டியைப் பார்த்தால் அவ்வளவு இளப்பாகப் போய்விட்டதா?" என்று கேட்டுக்கொண்டே, சட்டென்று தன் கழுத்தில் இருந்த கனமான் பழமையான் ஒரு தங்கச் சங்கிலியைக் கழற்றி அந்த மூட்டையில் வைத்துக் கட்டினாள். ஸ்ரீமான் புருஷோத்தமனும் தம் வீரத்தை மெச்சி வெள்ளைக்காரன் அளித்திருந்த இரண்டு பெரிய தங்க மெடல்களையும் அலமாரியிலிருந்து எடுத்து வந்து போட்டார்.