பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


1
பிள்ளையார் சிரித்தார்

மிகச் சிறிய ஊராக இருந்தாலும், சங்கரபுரம் சிறந்த புண்ணிய சிவஸ்தலம். அழகான ஊருக்குச் சோபை அளிப்பதேபோல், மத்தியில் ஏகாம்பரேசுவரருடைய ஆலயம் எழும்பி நின்றது. ஊரைச் சுற்றிலும் வேலி போட்டாற்போல் வளமான மணியாறு ஒடிக் கொண்டிருந்தது.

அநேகமாய் ஏழைச் சர்மாவைத் தவிர அந்த ஊரில் எல்லோருமே சுக ஜீவனம் செய்பவர்கள் என்றே சொல்ல வேண்டும். அக்கிரகாரத்தின் கோடியிலே வளைவு திரும்பியதும் காணப்படும் பாதி வேய்ந்த கூரை வீடுதான் சர்மாவினுடையது. தினமும் அவர் உஞ்சவிருத்தி செய்து சம்பாதித்துக் கொண்டு வரும் அரைச் செம்பு அரிசியை எதிர்பார்த்து, அதனுள் ஐந்து ஜீவன்கள்