பக்கம்:பிள்ளை வரம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரங்க போயன் 23. நினைவுகளையெல்லாம் மறந்துவிட வேண்டுமென்று கடையை நோக்கிப் போகலாஞன். அவனுக்கு இன்று பழைய ஆசைகளெல்லாம் இல்லை. பெரிய கல் வேலைக்காரணுக வேண்டும். மேஸ்திரியாக வேண்டும், குத்தகையாகப் பேசிப் பெரிய பெரிய வீடுகள் கட்டிப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணங்களெல்லாம் மறைந்து விட்டன. சின்னம்மாளேக் கலியானம் செய்து கொண்டு இப்படி வாழவேண்டும். அப்படி வாழ வேண்டும் என்று கண்ட கனவுகளெல்லாம் கலியானமாகி ஆறு மாதங்களிலேயே நொறுங்கி விட்டன. எப்படியோ நாளேக் கடத்த வேண்டியது என்பதுதான் இப்பொழுது அவனுடைய முடிவு. பண்ணைக்காரர் எப்படியும் பணம் கொடுக்கிரு.ர். அவர் பண்ணையிலேயே ஏதாவது இரண்டு வேலை செய்துகொண்டிருந்தால் மாதம் இருபது வள்ளம் கூலியும் கிடைக்கிறது. வேறு என்ன வேண்டும்? சின்னம்மாளிடம் ரங்க போயனுக்கு அன்பு இல்லையா என்று கேட்கலாம். அவளேயே கவியாணம் செய்துகொள்ள வேண்டுமென்று ஐந்து ஆண்டுகள் பிடிவாதமாக நின்றவலுக்கு மணவாழ்க்கை தொடங்கி ஆறு மாதங்களில அன்பு மறைந்து போகுமா? அப்படி மறைவது இயல்பாகத் தோன்ற வில்லை. அதிலும் அவனுக்கு இன்னும் இருபத்தைந்து வயதுகூட முடியவில்லே. இளமையின் உணர்ச்சிக ளெல்லாம் கொழுந்துவிட்டுக் கொண்டிருக்கும் பருவத்தில் அவன் இப்படி மாறியதைக் கண்டு பலர்

அன்பால் இரக்கம் கொண்டார்: :از ரங்க போயன் தன் நிலைமையை நினைத்து உள்ளம் புழுங்குவான். ஆல்ை அதைத் தன்னல் மாற்ற முடியுமென்ற நம்பிக்கை அவனுக்குச்சிறிதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/23&oldid=825103" இலிருந்து மீள்விக்கப்பட்டது