பக்கம்:பிள்ளை வரம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பிள்ளை வரம் கோயிலில் உண்டான சத்தங் கேட்டு, என்னடா, வீரா! அங்கே இந் நேரத்திலே என்ன பண்ணறே?" என்று கேட்டார். "இந்தக் கல்லைப் பிடுங்கி எறிஞ்சிட்டேனுங்க. இது சாமி இல்லை-வெறுங் கல்லு' என்று களங்க மில்லாமல் பதில் சொன்னன். பண்ணைக்காரருக்குத் தலைகால் தெரியாமல் கோபம் பிறந்துவிட்டது. கோயிலுக்குள்ளே நீ எப்படிப் போகலாமடா? போனது மில்லாமெ, சாமியைப் பிடுங்கிவிட்டாயா?” என்று உறுமி, அவனே அடி அடியென்று அடித்து நொறுக்கி விட்டார். வீரன் கோயிலுக்கு முன்னுலே மயங்கி உணர் வற்று விழுந்தான். வெகுநேரம் ஆகியும் அவனுக்கு மயக்கம் தெளியவில்லை. தகப்பனுக்குச் செய்தி கிடைத்தவுடன் வந்து, அவனைத் துரக்கிக்கொண்டு போய்க் குடிசையில் போட்டான். வீரன் கண் விழித்தபோது உச்சி வேளையாகி விட்டது. அவல்ை அசையக்கூட முடியவில்லை. உடம்பெல்லாம் ஒரே வலி. விலா எலும்பு இரண்டு ஒடிந்திருந்தன. யாரும் அவனுக்கு ஆறுதல் கூறுவார் இல்லை. தகப்பனும் தாயுங்கூட அவனே வாய்க்கு வந்தபடி வைது பேசிக்கொண் டிருந்தார்கள். வீரன் தனது அருமைக் கடாவை நினைத்துக் கொண்டே படுத்திருந்தான். மாலை வேளை ஆக ஆக அவன் உடம்பு கொதிக்கத் தொடங்கிற்று. மிகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/39&oldid=825120" இலிருந்து மீள்விக்கப்பட்டது