பக்கம்:பிள்ளை வரம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பிள்ளை வரம் ஆளுல் இதெல்லாம் குடிப் பேய் பிடிப்பதற்கு முந்திய நிகழ்ச்சிகள். இப்பொழுது எல்லாம் மாறி விட்டன! கந்தப்பனுக்குக் குடிப்பதற்கே கூலிப் பணம் கட்டுவதில்லை. வீட்டில் ராகிசுட இருக்காது; அதைப்பற்றி அவன் கவலைப்படமாட்டான்; சில சமயம் வேலாயி இரண்டனவாவது கொடுக்கும்படி கெஞ்சுவாள். குடி மயக்கம் இல்லாவிட்டால் கந்தப்பன், இந்தா' என்று கொடுப்பான்; குடி மயக்கமாயிருந்தால் வே லா, யி க் கு அடிதான் கிடைக்கும். இன்பம் குடிகொண்டிருந்த அக் குடும்பத்தில் வறுமை புகுந்துவிட்டது. வேலாயி உடல் மெலிந்து களையிழந்து வாடிவிட்டாள். வீட்டில் இருந்த நகைகளை எல்லாம் விற்ருய்விட்டது. குழந்தை களுக்குச் சரிவரச் சோறு போடுவதே இப்பொழுது முடிவதில்ல்ை ஒரு நாள் மாலே பண்ணைக்காரன் கந்தப்பனிடம் நூறு ரூபாய் கொடுத்துப் பக்கத்து ஊரில் ஒரு வனுக்குக் கொடுத்துவரும்படி சொன்ஞன். கந்தப் பன் போகும் வழியில் ஒரு கள்ளுக்கடை இருந்தது. அவன் அன்று காலை முதல் கையில் காசு இல்லாத தால் குடிக்கவில்லை. கடையைக் கண்டதும் கந்தப் பனுக்குக் கால் அங்கே இழுத்தது. சற்று நேரம் தயங்கினன். பண்ணைக்காரனுக்குத் தெரிந்தால் அப்புறம் வேலைக்கு வரவேண்டாமென்று சொல்லி விடுவானே என்ற பயமும் உண்டாயிற்று; "உம்! நாலணுவுக்குக் குடித்துவிட்டுப் பிறகு யாரிடத்திலா வது வாங்கிக் கொடுத்துவிட முடியாதா?’ என்ற எண்ணமும் நடுவே தோன்றியது. இதற்குள் அவன் கடைக்குப் பக்கமாக வந்துவிட்டான். 'கந்தப்பா, வாவா, உன்னைப் பத்தித்தான் இவ்வளவு நேரம் பேசிக்கிட்டிருந்தேன்’ என்று கடிையில் உட்கார்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/51&oldid=825134" இலிருந்து மீள்விக்கப்பட்டது