பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

167





மையார்மேற் கண்ணாள் வனமுலைமேல் ஆரழலைப்
பெய்வான் அமைந்த பிறை 108


கூட்டுமைபோய் சிறந்த கூரிருளைக் கூன்கோட்டால்
கோட்டுமண் கொண்ட குளிர்திங்கள் - ஈட்டுமணிப்
பூணிலா மென்முலைமேல் போதச் சொரிந்ததே
நீணிலா வென்னும் நெருப்பு 109


அன்னங்காள் நீங்களுமவ் வாதித்தன் தானும்போய்
மன்னும் படியகலா வல்லிரவில் - மின்னும்
மழைத்தாரை வல்லிருட்கும் வாடைக்கும் நாங்கள்
பிழைத்தால்வந் தேனென்னும் பேர் 110


கொப்புளங் கொங்கைமீர் திங்கட் சுடர்பட்டுக்
கொப்புளங் கொண்ட குளிர்வானை - இப்பொழுதும்
மீன்பொதிந்து நின்ற விசும்பென்ப தென்கொலொ
தேன்பொதிந்த வாயால் தெரிந்து 111


கானுந் தடங்காவும் காமன் படைவீடு
வானுந்தேர் வீதி மறிகடலும் - மீனக்
கொடியாடை வையமெல்லாம் கோதண்ட சாலை
பொடியாடி கொன்றதெல்லாம் பொய் 112


கொள்ளைபோ கின்ற துயிரென்னும் கோளரவின்
முள்ளெயிறோ மூரி நிலாவென்னும் - உள்ளம்
கொடிதிரா என்னும் குழையும் தழல்போல்
நெடிதிரா வாய்புலர நின்று 113


வெங்கதிரோன் தன்னை விழுங்கிப் புழுங்கியோ
கொங்கை அனலிற் கொழுந்தியோ - திங்கள்
விரிகின்ற வெண்ணிலவால் வேகின்ற தேயோ
எரிகின்ற தென்னோ இரா? 114


ஊழி பலவோர் இரவாயிற் றோவென்னும்
கோழி குரலடைத்த தோவென்னும் - ஆழி