பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

புகழேந்தி நளன் கதை



சொன்ன கலையின் துறையனைத்தும் தோய்ந்தாலும்
என்ன பயனுடைத்தாம் இன்முகத்து-முன்னங்
குறுகு தலைக் கிண்கிணிக்காற் கோமக்கள் பால்வாய்ச்
சிறுகுதலை கேளாச் செவி 247


போற்றரிய செல்வம் புனனாட் டொடும்போகத்
தோற்றமையும் யாவற்குந் தோற்றாதே-ஆற்றலாய்
எம்பதிக்கே போந்தருளு கென்றா ளெழிற்கமலச்
செம்பதிக்கே வீற்றிருந்த தேன் 248


சினக்கதிர்வேற் கண்மடவாய் செல்வர்பாற் சென்றீ
எனக்கென்னு மிம்மாற்றங் கண்டாய்-தனக்குரிய
தானந் துடைத்துத் தருமத்தை வேர்பறித்து
மானந் துடைப்பதோர் வாள்
249


மன்னவராய் மன்னர் தமையடைந்து வாழ்வெய்தி
இன்னமுதம் தேக்கி யிருப்பாரேல்-சொன்ன
பெரும்பே டிகளலரேற் பித்தரே யன்றோ
அரும்பேடை மானே யவர் 250


செங்கோலாய் உன்றன் திருவுள்ளம் ஈதாயின்
எங்கோன் விதர்ப்பன் எழில்நகர்க்கே-நங்கோலக்
காதலரைப் போக்கி அருளென்றாள் காதலருக்
கேதிலரைப் போல எடுத்து 251


பேதை பிரியப் பிரியாத பேரன்பின்
காதலரைக் கொண்டுபோய்க் காதலிதன்-தாதைக்குக்
காட்டுநீ என்றான் கலங்காத உள்ளத்தை
வாட்டுநீர் கண்ணிலே வைத்து 252


மக்களைப் பிரிதல்


தந்தை திருமுகத்தை நோக்கித்தமைப்பயந்தாள்
இந்து முகத்தை எதிர்நோக்கி-எந்தம்மை