பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

புகழேந்தி நளன் கதை


மேலெல்லாம் தோன்ற விழுங்கியதே வெங்கானின்
பாலெல்லாம் தீயுமிழும் பாம்பு299

வாளரவின் வாய்ப்பட்டு மாயாமுன் மன்னவநின்
தாளடைந்து வாழுந் தமியேனைத் - தோளால்
விலக்காயோ என்றழுதாள் வெவ்வரவின் வாய்க்கிங்
கிலக்காகி நின்றாள் எடுத்து 300

வென்றிச் சினவரவின் வெவ்வாய் இடைப்பட்டு
வன்துயராற் போயாவி மாள்கின்றேன் - இன்றுள்
திருமுகநான் காண்கிலேன் தேர்வேந்தே என்றாள்
பொருமுகவேற் கண்ணாள் புலர்ந்து 301

மற்றொடுத்த தோள்பிரிந்து மாயாத வல்வினையேன்
பெற்றெடுத்த மக்காள் பிரிந்தேகும் - கொற்றவனை
நீரேனும் காண்குதிரோ என்றழுதாள் நீள்குழற்குக்
காரேனும் ஒவ்வாள் கலுழ்ந்து 302

அடையும் கடுங்கானில் ஆடரவின் வாய்ப்பட்
டுடையுமுயிர் நாயகனே ஓகோ - விடையெனக்குத்
தந்தருள்வாய் என்னாத்தன் தாமரைக் கை கூப்பினாள்
செந்துவர்வாய் மென்மொழியாள் தேர்ந்து 303

உண்டோர் அழுகுரல்என் றொற்றி வருகின்ற
வெண்தோடன் செம்பங்கி வில்வேடன் - கண்டான்
கழுகுவாழ் கானகத்துக் காரரவின் வாயில்
முழுகுவாள் தெய்வ முகம் 304

வெய்ய அரவின் விடவாயின் உட்பட்டேன்
ஐயன்மீர் உங்கட் கபயம்யான் - உய்ய
அருளீரோ என்னா அரற்றினாள் அஞ்சி
இருளீரும் பூணாள் எடுத்து 305