பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

195


தையல் துயர்க்குத் தரியாது தம்சிறகாம்
கையால் வயிறலைத்துக் காரிருள்வாய் - வெய்யோனை
வாவுபரித் தேரேறி வாவென் றழைப்பனபோல்
கூவினவே கோழிக் குலம் 293

வான நெடுவீதி செல்லும் மணித்தேரோன்
தான மடந்தைக்குத் தார்வேந்தன் - போனநெறி
காட்டுவான் போலிருள்போய்க் கைவாங்கக் கானுடே
நீட்டுவான் செங்கரத்தை நின்று 294

செய்தபிழை ஏதென்னும் தேர்வேந்தே என்றழைக்கும்
எய்துதுயர்க் கரைகாணேனென்னும் - பையவே
என்னென்னா தென்னென்னும் இக்கானின் விட்டேகும்
மன்னென்னா வாடும் அயர்ந்து 295

அல்லியரந்தார் மார்பன் அடித்தா மரையவள்தன்
நல்லுயிரும் ஆசையும்போல் நாறுதலும் - மல்லுறுதோள்
வேந்தனே என்று விழுந்தாள் விழிவேலை
சார்ந்தநீர் வெள்ளத்தே தான் 296

வெறித்த இளமான்காள்! மென்மயில்காள்! இந்த
நெறிக்கண் நெடிதுழி வாழ்வீர் - பிரித்தெம்மைப்
போனாரைக் காட்டுதிரோ என்னாப் புலம்பினாள்
வானாடர் பெற்றிலா மான் 297

அரவு விழுங்குதல்


வேட்ட கரியை விழுங்கிப் பெரும்பசியான்
மோட்டு வயிற்றரவு முன்தோன்ற - மீட்டதனை
ஓரா தருகணைந்தாள் உண்தேன் அறற்கூந்தல்
பேரார் விழியாள் புலர்ந்து 298

அங்கண் விசும்பின் அவிர்மதிமேல் சென்றடையும் வெங்கண் அரவுபோல் மெல்லியலைக் - கொங்கைக்கு