பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

213


கலி நீங்குதல்


தேவியிவள் கற்புக்கும் செங்கோன் முறைமைக்கும்
பூவுலகில் ஒப்பார்யார் போதுவார் - காவலனே
மற்றென்பால் வேண்டும் வரங்கேட்டுக் கொள்ளென்றான்
முற்றன்பாற் பாரளிப்பான் முன் 409

உன்சரிதம் செல்ல உலகாளும் காலத்து
மின்சொரியும் வேலாய் மிகவிரும்பி - என் சரிதம்
கேட்டாரை நீயடையேல் என்றான் கிளர்மணிப்பூண்
வாட்டானை மன்னன் மதித்து 410

என்காலத் துன்சரிதம் கேட்டாரை யானடையேன்
மின்கால் அயில்வேலாய் மெய்யென்று - நன்காவி
மட்டிறைக்குஞ் சோலை வளநாடன் முன்னின்று
கட்டுரைத்துப் போனான் கலி 411

வேத நெறிவழுவா வேந்தனையும் பூந்தடங்கண்
கோதையையும் மக்களையும் கொண்டுபோய்த் - தாது
புதையத்தேன் பாய்ந்தொழுகும் பூஞ்சோலை வேலி
விதையக்கோன் செய்தான் விருந்து 412

உன்னையான் ஒன்றும் உணரா துரைத்தவெலாம்
பொன்னமருந் தாராய் பொறுவென்று - பின்னைத்தன்
மேனிமை குன்றாவெறுந்தேர் மிசைக்கொண்டான்
மானி அயோத்தியார் மன் 413

விற்றானை முன்செல்ல வேல்வேந்தன் பின்செல்லப்
பொற்றேர்மேற் றேவியொடும் போயினான் - முற்றாம்பல்
தேனி அளித்தருகு செந்நெற் கதிர்விளைக்கும்
மாநீர் நிடதத்தார் மன் 414

தானவரை வெல்லத் தரித்தநெடு வைவேலாய்
ஏனைநெறி தூரமினி எத்தனையோ - மானேகேள்