பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

செய்யுள் வடிவில் உள்ள இலக்கியம் அதன் உரை நடையாக்கம் : தனித்தனிக் கவிதைகள் படிப்பது அதன் நயத்தைக் காட்டும்; ஒட்டுமொத்தமாகப் படிக்க உரை நடையே உதவும்.

பனிக்கட்டி உருகினால் அது அருவியாகிறது. செய்யுளை உடைத்தால் அது உரைநடையாகிறது. பனிக்கட்டி பார்க்க அழகாக இருக்கும். பருக அருவி நீரே சுவை தருகிறது.

நளன் கதை மிகப் பழைய கதை. பாரதத்துக்கு முன் எழுந்த கதை; பார்த்திபருள் சூதாடி நாட்டைத் தோற்றவன் கதை இது. பாண்டவர்கள் போலவே காட்டிற்குச் செல்லும் கதி இவனுக்கும் ஏற்பட்டது.

காவியம் என்பது பொதுவாக விருத்தப் பாவில் செப்புவது தமிழ் மரபு; பழங்காலத்தில் இளங்கோவும் சாத்தனாரும் படைத்துத் தந்தவை ஆசிரியப்பா. வெண்பாவில் யாரும் ஒரு காவியத்தைப் படைத்தது இல்லை.

குறள் வெண்பாவை வள்ளுவர் படைத்தார்; இவை நேரிசை வெண்பாக்கள்; நான்கு அடிகள் கொண்டவை; செப்பல் ஒசை உடையது. கதை சொல்வதற்கு வேண்டிய ஓட்டம் இதில் உள்ளது.

ஏறக்குறைய நானூறு பாக்கள் கொண்டது இந்நூல். கம்பருக்குப் பின் எழுந்த நூல் இது. ஒட்டக் கூத்தரை ஒட்டி எழுந்தது இது. ஒட்டக் கூத்தரும் புகழேந்தியாரும் சம காலத்தவர் என்று கூறப்படுகின்றனர்.

குறுநில மன்னன் சந்திரன்சுவர்க்கி என்பவன் இவரை ஆதரித்தவன் என்பது தெரிகிறது. இவர் பாடல்களில்